திமுக வாக்குறுதி, 2026 தேர்தல் · DMK promise, 2026 election · சுகாதாரம் · Health
தமிழ்நாட்டில் தற்கொலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் விதமாக ‘தற்கொலை தவிர்ப்புக் கொள்கை’ உருவாக்கப்படும். மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
A 'Suicide Prevention Policy' will be created to reduce deaths by suicide in Tamil Nadu. கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.
Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.
எங்கிருந்து · From : தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 - 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல், பக்கம் 33 · DMK Election Manifesto 2026 (17th Assembly election), page 33 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))
இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed
2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.
This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.
திமுக: சுகாதாரம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Health “நலமுடன் தமிழ்நாடு 2030” என்ற திட்டத்தின்படி தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 இலட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சமாகவும் உயர்த்தப்படும். சென்னை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் இருப்பது போன்று கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும். தாய்சேய் நலனில் IMR மற்றும் MMR குறைக்கும் தரவரிசையில் இந்தியாவிலேயே முதல் இடம்பெற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மண்டல அளவில்- தஞ்சாவூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய இடங்களில் உயர்சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் இளம் வயதினர் உயிரிழப்பிற்கும், வாழ்நாள் குறைவதற்கும் காரணமான இதய நோய்கள், நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்கள், சுவாச நோய், செரிமானம் சார்ந்த நோய்கள் உள்ளிட்ட முதன்மையான பத்து தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். எல்லாம் · All of them
Updated 14 Oct 2026, 15:57 .