வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026இலவச மின்சாரம் பெறும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்புகளின் சக்தி மற்றும் அவர்களின் பாசனத் தேவைக்கு ஏற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும். · To more than about 20 lakh farmers who receive free electricity, modern electric pumpsets with no meter of any kind fitted will be provided, according to the power of the pumps they currently have and their irrigation needs.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாயாகவும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27,000 ரூபாயாகவும், மானாவாரிப் பயிர்களுக்கு 12,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். · The compensation paid for irrigated crops and paddy crops affected by rain and floods during disasters will be raised to 25,000 rupees per hectare, to 27,000 rupees for long-term crops, and to 12,000 rupees for rain-fed crops.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நிகர சாகுபடி பரப்பு (Net Cultivable Area) 50 இலட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். · The Net Cultivable Area will be raised to 50 lakh hectares.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் உலர்களத்துடன் கூடிய நிரந்தரக் கட்டடங்களாகக் கட்டப்படும். · Temporary direct paddy procurement centres will be built as permanent buildings with drying yards in all places where it is possible.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். · The paddy procurement price will be raised to Rs. 3,500 per quintal.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். · The sugarcane procurement price will be raised to Rs. 4,500 per tonne.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மண்வள அட்டைகள் 43 இலட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, இயற்கை வேளாண்மைப் பரப்பு 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மைப் பரப்பு ஒரு இலட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும். · Soil health cards will be given to 43 lakh farmers, and the natural farming area will be expanded to 17 thousand hectares and the organic farming area to one lakh hectares.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
உணவு உற்பத்தி 125 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும். · Food production will be raised to 125 lakh metric tonnes.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
உழவர்கள் தங்கள் பகுதிக்கு ஏற்ற பயிர்களைச் சிறந்த சாகுபடி முறைகளைப் பின்பற்றி அதிக மகசூலை அடைந்திடும் வகையில், “கிராம அளவிலான பயிர்ச் சாகுபடித் திட்டம்” தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். · So that farmers can achieve higher yields by following the best cultivation methods for crops suited to their area, a "Village-level Crop Cultivation Plan" will be prepared and implemented.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
உயிர்ம வேளாண்மை (Organic Farming) சாகுபடி பரப்பினை 40,000 ஹெக்டேரிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுப்பதுடன், அதன் பயன் முழுமையடையும் வகையில் தொடர் ஆலோசனைகள் வழங்கப்படும். · Action will be taken to raise the area under Organic Farming from 40,000 hectares to one lakh hectares in the next 5 years, and continuous advice will be provided so that its benefit is fully realised.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இயற்கை வேளாண்மை (Natural Farming) சாகுபடி பரப்பினை 5 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to increase the area under Natural Farming 5 times in 5 years.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வேளாண் காடுகள் பரப்பினை அதிகரிக்கும் வகையில் புங்கன், நாவல், ஈட்டி, தேக்கு, சந்தனம், செம்மரம், மகோகனி, மலைவேம்பு, நீர் மருது போன்ற மரங்களை வளர்ப்பது ஊக்குவிக்கப்படும். · To increase the area under agroforestry, the growing of trees such as pungan, naval, eetti, teak, sandalwood, red sanders, mahogany, malaivembu and neer marudhu will be encouraged.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பாரம்பரிய நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் 75,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு 1,500 மெட்ரிக் டன் விதைகள் உழவர்களுக்கு வழங்கப்படும். · 1,500 metric tonnes of seeds a year will be given to farmers so that traditional paddy, millets and pulses are cultivated on 75,000 acres.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
232 promises in all.