வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026தமிழ்நாடு பனைமர வளர்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டு 200 கோடி ரூபாய் அதற்கு நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியைப் பயன்படுத்தி பதனீர் பதப்படுத்துதல், பனை வெல்லம் உற்பத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பனைப்பொருட்கள் ஏற்றுமதி ஆகியவை திட்டமிடப்படும். · A Tamil Nadu Palmyra Development Corporation will be set up and Rs 200 crore allocated to it. Using that fund, processing of padaneer, production of palm jaggery and export of value-added palm products will be planned.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். · Crop loans taken from cooperative banks by farmers holding less than 5 acres of land will be completely waived.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும். · 50 percent of the crop loans taken from cooperative banks by farmers holding more than 5 acres of land will be waived.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில்(ஜூலை - ஆகஸ்ட் பருவம், ஜனவரி-பிப்ரவரி பருவம்) வழங்கப்படும். · To the family of every farmer who owns agricultural land, 15 thousand rupees a year will be given as sowing-season financial assistance in two instalments (July - August season, January-February season).
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, உழவர் உரிமம் அட்டை வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த உரிம அட்டை வைத்திருக்கும் உழவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். · A system of issuing a cultivator's licence card to tenant farmers and agricultural labourers will be introduced. Cultivators holding this licence card will have an assistance amount of 10 thousand rupees a year paid directly into their bank account.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
நெல்லுக்கு குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாயும் குறைந்த பட்ச ஆதார விலையாக வழங்கப்படும். · 3500 rupees per quintal for paddy and 4500 rupees per tonne for sugarcane will be given as the minimum support price.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மஞ்சள், கரும்பு, நெல் மற்றும் கொப்பரைத் தேங்காய் உள்ளிட்டவற்றின் சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது, அந்த இழப்பையும் அரசு ஏற்றுக் கொள்ளும். · When there is a fall in the market price of turmeric, sugarcane, paddy and copra coconut among others, the government will also bear that loss.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஆதாரவிலைத் தொகை மற்றும் சந்தை இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட இந்த நிதி அனைத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேடியாக செலுத்தப்படும். · All these funds, including the support price amount and the market compensation amount, will be paid directly into the farmers' bank accounts.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் ஆலோசனைகள், எளிமையாகச் சந்தைப்படுத்தும் வழிமுறைகள், விலை நிர்ணயம் தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை கண்டறிய விவசாயிகள் வருமான உயர்வு ஆணையம் அமைக்கப்படும். இது ஆண்டுதோறும் அரசுக்கு மேற்கண்டவை குறித்துப் பரிந்துரைகள் வழங்கும். · A Farmers' Income Enhancement Commission will be set up to identify advice to increase farmers' income, methods for easy marketing, and guidelines on price fixing. It will give recommendations on the above to the government every year.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், தமிழகம் முழுவதும் கூடுதல் வேளாண்-வானிலை அறிவியல் மையங்கள் (Agro-meteorological) அமைக்கப்படும். · To benefit farmers, additional agro-meteorological science centres (Agro-meteorological) will be set up throughout Tamil Nadu.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இதன்மூலம், மழைக்காலங்களில் பாதிக்கப்படும் பயிர்களின் இழப்பு துல்லியமாக கணக்கிடப்படும். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடு விரைவாக வழங்கப்படும். · Through this, the loss of crops affected during the rainy seasons will be calculated accurately. On that basis, compensation will be given to farmers quickly.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
வேளாண்மை நடைபெறும் நிலம் 100 சதவிகிதம் பயிர்க் காப்பீட்டில் கொண்டுவரப்படும். · 100 percent of the land under cultivation will be brought under crop insurance.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
72 promises in all.