வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழு பரிந்துரைகளை, நாடு தழுவிய விவாதப் பொருளாக்கி, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தி, மாநில உரிமைகளை நிலைநாட்டிட, உடன்பாடான கருத்துள்ள இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டு, அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கழகம் மேற்கொள்ளும். · The Kazhagam will make the recommendations of the committee headed by retired Supreme Court Justice Kurian Joseph a subject of nationwide debate. To stop the Union government's autocratic course and establish state rights, it will work together with like-minded movements and take all the steps needed for this.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சரக்கு மற்றும் சேவை வரியின் ஒருபக்க சார்பினைக் குறைத்து கூட்டாட்சி சமநிலையை உருவாக்க வலியுறுத்துவோம். · We will press for the one-sided bias of the Goods and Services Tax to be reduced so that federal balance is created.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் தற்போது மாநிலங்களுக்கு உள்ள பங்கினை 50 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்துவோம். · We will press for the states' present share of Goods and Services Tax revenue to be raised from 50 percent to 70 percent.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கிட ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். · The Union government will continue to be urged to grant Indian citizenship to Sri Lankan Tamils who have been living in Tamil Nadu for many years.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இந்தியா முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதை ஏற்காத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டை சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் போக்கினை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும். · The D.M.K. will continue to oppose the Union Government's course of unlawfully withholding the fund allocation of states such as Tamil Nadu that do not accept a single education policy for all of India.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ்நாட்டின் மீது இத்தகைய இந்தி மொழித் திணிப்பை நுழைக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை என்றும் ஏற்க மாட்டோம். · We will never accept the Union Government's New Education Policy, which brings such Hindi imposition upon Tamil Nadu.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்கும் அதேவேளையில், இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இந்திய - இலங்கை ஒப்பந்தம் மீளாய்வுச் செய்யப்பட்டு, கச்சத்தீவை மீட்கத் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். · While creating alternative livelihoods for them, to find a permanent solution to this problem we will continue to urge the Union Government to review the India - Sri Lanka agreement and retrieve Katchatheevu.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ்நாட்டின் நிதி உரிமைகளை மீட்டெடுத்து நமக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய அனைத்து நிதிகளையும் போராடிப் பெறுவோம். · We will reclaim Tamil Nadu's financial rights and fight to obtain all the funds legally due to us.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். · Efforts will be made to bring education, which is in the Concurrent List of the Constitution, back to the State List.

DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை தி . மு . க . கடுமையாக எதிர்ப்பதோடு , அதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் . · The D. M. K. will strongly oppose the Union government's efforts to sell the shares of the Neyveli Lignite company to private parties, and will make every effort to prevent it.

DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

கோழிகளின் தீவனமான சோயா , SF.Red Seed.GN ஆகியவைகளுக்கு GST - யிலிருந்து வரிவிலக்கு பெற தி . மு . க . முயற்சிகள் எடுக்கும் . · The D.M.K. will make efforts to obtain exemption from GST for soya, SF.Red Seed.GN, which are poultry feed.

DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

11 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.