வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மாற்ற வேண்டும். இந்த மாற்றத்திற்காக வேண்டி நாம் தமிழர் அரசு மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தும். · It must be changed to one parliamentary constituency for every three assembly constituencies. For this change, the Naam Tamilar government will press the Union government together with other states.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தனிப்பட்டவர் தரவுப் பாதுகாப்பு (DPDP) சட்டத்தின்கீழ், RTI பிரிவு 8(1)(j)இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

“தற்போது இருக்கிற தேசிய இன மக்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ஒன்றிய அரசியலைப்புச் சட்டத்தைத் தற்கால அரசியல், சமூக, சூழல்களுக்கு உலக ஒழுங்கிற்கு ஏற்றாற்போல மாற்றி அமைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகின்றது. · The Naam Tamilar Katchi presses the demand that "keeping in mind the rights of the existing national peoples, the Constitution of the Indian Union must be reshaped to suit present political and social conditions and the world order."

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசிற்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வரப் பாடுபடுவோம். · Under Naam Tamilar rule, with the slogan of federalism at the Union and autonomy in the state, we will strive to bring the appropriate change in the Constitution of the Indian Union so that the state government has law-making power over all kinds of subjects.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அந்தந்த மாநிலங்களுக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த மாநிலங்களின் தலைமை நீதிமன்றங்களே உச்ச அதிகாரம் பெற்ற நீதிமன்றங்களாகச் செயல்பட்டு தீர்ப்பினை வழங்கிட இந்திய அரசியலமைப்பில் உரிய மாற்றத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்படும். · It will be pressed that the appropriate change be made in the Indian Constitution so that, for cases within each state, that state's High Court acts as the court of final authority and delivers the judgment.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அந்தந்த மாநில அரசின் தலைமை நீதிபதியாக, அந்தந்த மண்ணின் மைந்தர்களே அமர்த்தப்படும் வகையில் ‘சட்ட மாற்றத்தை’ ஏற்படுத்த நாம் தமிழர் அரசு, மற்ற மாநிலங்களோடு இணைந்து குரலெழுப்பும், பாடுபடும். · The Naam Tamilar government, together with other states, will raise its voice and strive to bring a 'change in law' so that only the sons of each soil are appointed as Chief Justice of each state.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அந்தந்த மாநிலத்தில் பெறப்படும் வரிகளில் 75 விழுக்காடு மாநில அரசுக்கும், 25 விழுக்காடு ஒன்றிய அரசுக்குமாக பிரித்துக் கொள்ளும் வகையில் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து நாம் தமிழர் அரசு போராடும். · The Naam Tamilar government will fight together with other state governments so that, of the taxes collected in each state, 75 percent goes to the state government and 25 percent to the Union government.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கின்ற மாநில அரசுகள் ஒவ்வொன்றும் அந்தந்தத் தேசிய இனங்களின் நலன் சார்ந்து தனி அரசியலமைப்பு ஆவணத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற உரிமையைப் பெற நாம் தமிழர் அரசு பாடுபடும். · The Naam Tamilar government will strive to obtain the right for each of the state governments within the Indian Union to establish a separate constitutional document based on the interests of its respective national community.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாம் தமிழர் அரசு, ஒன்றிய நாடுகள் அவை (ஐ.நா.) வரையறுத்துள்ள 18 ஆகவைக்குக் கீழ் உள்ளவர்களை அனைத்துச் சட்டங்களிலும் சிறார்களாக அறிவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும். · The Naam Tamilar government will urge the Union government to declare those below the age of 18, as defined by the United Nations (U.N.), as children in all laws.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒன்றிய அரசுடன் போராடி மீனவ மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தரும். · It will fight with the Union government and secure justice for the fishing communities.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மீனவர்களின் நலனுக்கென்று தனி அமைச்சகம் வேண்டும் என்ற கோரிக்கை (மற்ற மாநில மீனவர்களுக்காகவும்) ஒன்றிய அரசிடம் வலியுறுத்திப் பெறப்படும். · The demand for a separate ministry for the welfare of fishermen (also for fishermen of other states) will be pressed with the Union government and secured.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

42 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.