வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

ஆங்கிலம் மட்டுமே ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என தி.மு.க. தொடர்ந்து போராடும். · The D.M.K. will keep fighting for English alone to be the link language between the Union and State governments.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாட்டுப்புறக் கலைகள், வாழ்வியல் மரபுகள், கட்டடக்கலை, தொல்லியல் மற்றும் இலக்கியத் தரவுகளை ஒருங்கிணைக்கப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய “ஒருங்கிணைந்த பண்பாட்டு ஆணையம்” (Heritage Commission) அமைக்கப்படும். · An "Integrated Culture Commission" (Heritage Commission), bringing in various departments, will be set up to bring together data on folk arts, traditions of life, architecture, archaeology and literature.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாட்டுப்புறக் கலைத்துறை, கலைப் பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் ஒருமுகப்படுத்தப்படும். · The work of the Folk Arts Department, the Art and Culture Department, the Tourism Department and the Archaeology Department will be brought together under one direction.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கலைத் திறனாய்வு குறித்த குறுகியகாலப் படிப்புகள் (Art Appreciation Courses) தொடங்கப்படும். · Short-term courses on art appreciation (Art Appreciation Courses) will be started.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தொல்லியல் மற்றும் ஆன்மீகச் சுற்றுலாக்களுக்கான சிறப்பு வழிகாட்டிகள் (Special Guides) உருவாக்கப்படுவர். · Special guides (Special Guides) for archaeological and spiritual tourism will be trained.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பண்பாட்டு நிகழ்வுகள், இசை மற்றும் நடனக் கலைகளைக் காணொளி வாயிலாக ஆவணப்படுத்தி, உலகளாவிய தரத்தில் மின்நூலகம் (Digital Library) அமைக்கப்படும். · Cultural events, music and dance arts will be documented on video, and a digital library (Digital Library) of world standard will be set up.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ்ப் பண்பாட்டு மரபுசார் கலைகளைக் கொண்டு சேர்த்திடும் வகையில் ‘தமிழ்ப் பண்பாட்டுப் பயணம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும். · A scheme called 'Tamil Cultural Journey' will be implemented to take traditional Tamil cultural arts to school and college students.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

உயர்தனிச் செம்மொழியாம் அன்னைத் தமிழின் சிறப்பினைப் போற்றிடும் வகையில் பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும் மொழி வல்லுநர்களையும் கொண்டு சங்கத்தமிழ் முதல் கணினித்தமிழ் வரையிலான தமிழ்மொழியின் வளர்ச்சியையும், அதன் எதிர்காலப் பயணத்திற்கான பாதைகளையும் வகுக்கும் நோக்கில் ‘செம்மொழி மாநாடு’ சென்னையில் சிறப்பாக நடத்தப்படும். · To honour the greatness of mother Tamil, a distinguished classical language, a 'Classical Language Conference' will be held in Chennai with international Tamil scholars and language experts. It will set out the growth of the Tamil language from Sangam Tamil to computer Tamil and the paths for its future.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கலைச்சொல்லாக்க முயற்சியின் ஒரு பகுதியாக ஒவ்வொரு துறைசார்ந்தும், பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளிவரும் முக்கியமான கட்டுரைகள் உடனுக்குடன் மொழிபெயர்த்து வெளியிடப்படும். · As part of the effort to coin technical terms, important articles published in international research journals in each field will be translated and published promptly.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தமிழ்மொழி கற்பித்தலுக்கான ஆய்வகங்கள் பள்ளிகளில் உருவாக்கப்படும். · Laboratories for teaching the Tamil language, with modern technology facilities, will be created in schools.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ் மொழியியல், இலக்கியத் துறைகளில் நம்பிக்கைக்குரிய இளம் ஆய்வாளர்களை அடையாளப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஐந்து முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்குப் பரிசுத் தொகையுடன் கூடிய விருதுகள் வழங்கப்படும். · To recognise promising young researchers in Tamil linguistics and literature, awards with prize money will be given every year to five doctoral theses.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ் மொழிப்பற்று, தமிழ்நாட்டின் பண்பாட்டுக் கூறுகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தும் திரைப்படங்களுக்கு ‘முத்தமிழறிஞர் கலைவித்தகர்’ விருது வழங்கப்படும். · The 'Muthamizharignar Kalaivithagar' award will be given to films that portray well a love of the Tamil language and the cultural features of Tamil Nadu.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

81 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.