வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நிறைவேற்ற வலியுறுத்தப்படும். · It will be urged that the two-language policy — each state's own mother tongue and English as the link language — be implemented in all states of India.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளே நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கு வலியுறுத்தப்படும். · It will be urged that in the High Courts the respective state languages be used as the court language.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழர் பண்பாட்டுத் தளங்கள் 500 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும். · Tamil cultural sites will be restored at a cost of 500 crore rupees.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சிலம்பம், கும்மியாட்டம், கோலாட்டம், தஞ்சை ஓவியம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய பண்பாட்டுக் கலைகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும். · Tamil traditional cultural arts including Silambam, Kummiyattam, Kolattam and Thanjavur painting will be revived.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளையும், பண்பாட்டு அடையாளங்களையும் உலகளவில் புகழ்பெறச் செய்யும் வகையில் கலாச்சாரக் கண்காட்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்படும். · Cultural exhibitions will be held at the international level to make the historical glories and cultural identities of Tamils renowned worldwide.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சலுவன்குப்பம், காவேரிப்பட்டினம், பூம்புகார் ஆகிய 10 தளங்களில் தொல்லியல்துறை தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள த.வெ.க துணைநிற்கும். · TVK will support the Archaeology Department in continuing excavations at the 10 sites of Keezhadi, Adichanallur, Kodumanal, Mayiladumparai, Sivakalai, Azhagankulam, Arikamedu, Saluvankuppam, Kaveripattinam and Poompuhar.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இரு தளங்களுக்கும் யூனெஸ்கோ-வின் உலகப் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். · Efforts will be made to obtain UNESCO World Heritage Site recognition for the two sites of Keezhadi and Adichanallur.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அரசு செலவில் இத்தளங்களுக்கு ‘பள்ளி மாணவர் சுற்றுலா‘ ஏற்பாடு செய்யப்படும். · A 'school students' tour' to these sites will be arranged at government expense.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சர்வதேசத் தரத்தில் ‘தமிழர் நாகரீக அருங்காட்சியகம்‘ மதுரையில் அமைக்கப்படும். · A 'Tamil Civilisation Museum' of international standard will be set up in Madurai.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இரண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும். · Two schemes will be implemented to encourage folk arts and artists.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். · To ensure that registered folk artists get one hundred days of employment a year, opportunities will be created for them to showcase their artistic skills at government festivals and events.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மேலும், அவர்களுக்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்கு உதவியாக 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். · Further, financial assistance of 15 thousand rupees will be given to help them buy the instruments they need.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
வளரும் இளம் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஆயிரம் இளம் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும். · To encourage emerging young folk artists, a stipend of 25 thousand rupees a year will be given to one thousand young artists.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
42 promises in all.