வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2059 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம். · We will press for all national entrance examinations for higher education, including medicine, to be cancelled.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும். · Educational scholarships for Adi Dravidar, Scheduled Tribe, Backward Class, Most Backward Class and Denotified Community students will be increased.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நாட்டுப்புறக் கலைஞர்களின் குழந்தைகள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்திடும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். · A special scheme will be implemented to ensure that the children of folk artists receive higher education.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 உதவித்தொகை, ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும். · The Rs. 1000 monthly assistance being given to girl students under the Pudhumai Penn scheme, which encourages women to pursue higher education, will be raised to Rs. 1500.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பள்ளியில் இடைநிற்றல் இல்லா (Zero Dropout Tamil nadu) மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம். · We will raise Tamil Nadu into a state with no school dropouts (Zero Dropout Tamil nadu).
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
குழந்தைகளுக்குப் பாலின நீதிக்கல்வி, குழந்தை உரிமைக்கல்வி, அரசமைப்பு பற்றி அறிமுகக் கல்வி போன்றவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். · Gender justice education, child rights education, introductory education on the Constitution and the like will be included in the curriculum for children.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களிடையே பள்ளி இடைநிறுத்தம் இல்லாத நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்குத் தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். · Steps will be taken to reach a state with no school dropouts among Adi Dravidar and tribal students. All the help needed for this, including training and guidance, will be provided.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் விரிவாக்கப்படும். · Residential schools for tribal people will be expanded.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
12-ஆம் வகுப்புக்குப் பின், உயர்கல்வி நுழைவு, தொழிற்கல்வி இணைப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு என முதல் தலைமுறை மாணவர்களுக்குத் துணை நிற்போம். · After Class 12, we will stand by first-generation students through entry into higher education, links to vocational education and continuous monitoring.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும். · Special schemes will be drawn up to help Backward Class, Most Backward Class and Denotified Community students excel at all levels of education.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உயர்கல்வியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பெறுவதை ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் துவங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியரின் பயணச் செலவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். · A special scheme will be launched to encourage Backward Classes, Most Backward Classes and Denotified Communities to pursue higher education in foreign universities. The government itself will bear the travel costs and college fees of the selected students.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிறுபான்மை பள்ளிகளில் காலியாக உள்ள அரபி ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படும். · Vacant Arabic teacher posts in minority schools will be filled.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இசுலாமியப் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்ஃபு வாரியத்தின் வாயிலாக கூடுதல் கல்லூரிகள் திறக்கப்படும். · To encourage the education of Muslim women, more colleges will be opened through the Waqf Board.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
232 promises in all.