வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2059 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026இளங்கலை இயற்கை வேளாண்மை, முதுகலை இயற்கை வேளாண்மை, ஆராய்ச்சி மேற்படிப்பு உள்ளிட்ட அனைத்து வேளாண் கல்வியியலும் பயிற்றுவிக்க வேளாண் பெருங்குடியோன் அப்பா கோ.நம்மாழ்வார் பெயரில் தஞ்சாவூரில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். · To teach all agricultural studies, including undergraduate natural farming, postgraduate natural farming and research degrees, an agricultural university will be started in Thanjavur in the name of the great farmer Appa G. Nammalvar.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நாம் தமிழர் அரசு, தமிழ்வழி மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி, அதில் ‘பிச்க்றீன்’ தமிழில் எழுதிய மருத்துவப் பாடப்புத்தகங்களை இடம்பெறச் செய்யும்.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அதனால் ஆங்கில மருத்துவம் அனைத்தும் தமிழ் வழியில் நடத்தப்படும். · Therefore all allopathic (English) medicine will be taught in the Tamil medium.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அதனால் தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்பப் பல்மருத்துவர்களை உருவாக்க வேண்டி புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் மாவட்டந் தோறும் தொடங்கப்படும் · Therefore, in order to produce dentists in proportion to Tamil Nadu's population, new dental colleges will be started in every district
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இங்குப் பன்னாட்டளவில் சிறந்த விளையாட்டுப் பயிற்சிகளும், உலகத் தரத்திலான பயிற்றுநர்களும் பணியமர்த்தப்படுவார்கள். · A sports university will be started in the name of C.Pa. Adithanar. Internationally excellent sports training and world-class trainers will be put in place here.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
விளையாட்டுத் துறையில் உயர் ஆராய்ச்சி படிப்புகளும் மேற்கொள்ளப்படும். · Higher research studies in the field of sports will also be undertaken.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இந்தப் பல்கலைக்கழகம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள விளையாட்டுப் பல்கலைக்கழகத்தைவிட சிறப்பான கட்டமைப்பைக் கொண்டதாக அமைக்கப்படும். · This university will be built with better infrastructure than the sports university in Patiala, Punjab state.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அனைத்துச் சிற்றூர்களிலும் உள்ள பள்ளிகள் அனைத்திலும் சிறந்த உடற்பயிற்சிக் கூடங்கள் அனைத்து வகையான கருவிகளுடன் அமைக்கப்படும். · Good gymnasiums with all kinds of equipment will be set up in all schools in all villages.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கல்விக்கூடங்களில் பாலியல் விழிப்புணர்வு, உடல்நல கருத்துரைகள், தற்சார்பு வாழ்க்கை முறை, தற்காப்புக் கலைகள், வாழ்க்கைக் கல்வி ஆகியவை சிறந்த வல்லுநர்களைக் கொண்டு சிறப்புக் கல்வியாகக் கற்றுத்தரப்படும். · In educational institutions, sex awareness, health advice, a self-reliant way of life, self-defence arts and life education will be taught as special education by excellent experts.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
Autism போன்ற பாதிப்புக்குள்ளான அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடுடைய குழந்தைகளுக்கான, அரசு சிறப்புப் பள்ளி மாநிலத்திற்கே ஒன்றுதான் உள்ளது. இது மாவட்டத்துக்கு ஒரு பள்ளி என்று உருவாக்கப்படும். · There is only one government special school in the whole state for children with intellectual developmental disabilities affected by conditions such as Autism. This will be created as one school per district.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
உறுதியாகப் படித்தாக வேண்டும் என்ற உத்தரவுடன், தடையின்றித் தங்கிப் படிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் நமது அரசு ஏற்படுத்தித் தரும். · With an order that they must study, our government will create all opportunities for them to stay and study without hindrance.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இதுபோன்ற குழந்தைகளுக்குத் தனி வகுப்புகளை உருவாக்கி, தேர்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படும். அதற்கான வாய்ப்புகள் அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். · Separate classes will be created for such children, and training will be given by skilled teachers. The facilities for this will be created in all schools.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அனைத்துப் பள்ளிகளிலும் தனி நூலகங்கள் அமைக்கவும், மாதம் ஒரு முறை அறிவுசார் ஆவணப்படங்கள் திரையிடவும் ஏற்பாடு செய்யப்படும். · Arrangements will be made to set up separate libraries in all schools and to screen educational documentaries once a month.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
133 promises in all.