வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

த.வெ.க சார்பில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். · On behalf of TVK, a resolution opposing the Union Government's New Education Policy will be passed in the Legislative Assembly.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

த.வெ.க சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படும். · On behalf of TVK, pressure will continuously be put on the Union Government to abolish the NEET exam.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

300 குறள்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்குப் பணப் பரிசுகள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும் · Cash prizes and educational scholarships will be given to students who have fully learnt 300 Kurals.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

1,330 குறள்களையும் முழுமையாகக் கற்றவர்களுக்கு உலகளாவிய கலாசார அனுபவம், மாநில அளவிலான அங்கீகாரம் மற்றும் நீண்டகால கல்வி ஆதரவு வழங்கப்படும். · Those who have fully learnt all 1,330 Kurals will be given a global cultural experience, state-level recognition and long-term educational support.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

பள்ளிகள் மற்றும் வணிகக் கல்வி நிறுவனங்களில் திருக்குறள் ஒரு சிறப்பு பாடமாக அறிமுகப்படுத்தப்படும். · The Thirukkural will be introduced as a special subject in schools and business education institutions.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தொழில் கல்வி, மருத்துவம், சட்டம், நிர்வாகவியல் பயிலும் ஆதி திராவிடர் – பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். · Adi Dravidar – Tribal students studying professional courses, medicine, law and management will be given a scholarship of 40 thousand rupees a year.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

சிறுபான்மையினர் கல்விக்கான திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். · Schemes for minority education will be implemented within the planned time.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

வக்ஃப் வாரியத்தின் மூலம் சிறுபான்மையினர் பெண்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்படும். · Colleges for minority women will be opened through the Waqf Board.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் சிறப்புக் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆசிரியர் நியமிக்கப்படுவார். · A dedicated teacher for children with special needs will be appointed in every government school.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

சிறப்புக் குழந்தைகளுக்கான பிரத்தியேகப் பள்ளிகளும் திறக்கப்படும். · Dedicated schools for children with special needs will also be opened.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

நெசவாளர் குழந்தைகள் வடிவமைப்பு (Design) மற்றும் துணிநூல்துறையில் (Textile Engineering) உயர் கல்வி பயில்வதற்கு உதவித் தொகை வழங்கப்படும். · Assistance will be provided for weavers' children to pursue higher education in Design and Textile Engineering.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு, தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்திருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள். · A Tamil Nadu Teachers Protection Act will be brought in, and teachers working temporarily who have completed 5 years will be made permanent teachers.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தற்காலிக ஆசியர்களாகப் அவர்கள் பணியாற்றும் காலத்தில், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக தற்காலிக ஆசிரியர்களும் “சம வேலைக்கு சம ஊதியம்” பெறுவது உறுதி செய்யப்படும். · During the period they work as temporary teachers, it will be ensured that temporary teachers also receive "equal pay for equal work" on par with permanent teachers.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெற அழைத்துச் செல்லப்படுவார்கள். · To improve the qualifications of government school teachers, selected qualified teachers will be taken every year for training to Singapore and Finland, countries that excel in school education.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

61 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.