வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம். · We will make 10 cities of Tamil Nadu feature in the list of the nation's top 100 cleanest cities.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ஸ்வச் பாரத் இயக்கத்தின் கீழ், தூய்மைக் குறியீட்டில் நமது மாநிலத்தின் நிலையை உயர்த்தி, முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து 10 நகரங்கள் இடம் பெறுவதை உறுதி செய்வோம். · Under the Union Government's flagship Swachh Bharat Mission, we will raise our state's standing in the cleanliness index and ensure that 10 cities from Tamil Nadu feature in the list of the top 100.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

விதிமீறுபவர்கள் மீது கடுமையான அபராதம் விதித்தல், நவீன கண்காணிப்பு அமைப்புகள் மூலம் சமரசமற்ற கண்காணிப்பை உறுதி செய்தல் மற்றும் குப்பைக் கொட்டுதலுக்கு எதிரான படைகள் (Anti-dumping task forces) மூலம் விரைவான நடவடிக்கை எடுத்து சுற்றுசூழல் புனிதத்தைப் பாதுகாப்போம். · By imposing heavy fines on violators, ensuring uncompromising monitoring through modern surveillance systems, and taking swift action through anti-dumping forces (Anti-dumping task forces), we will protect the sanctity of the environment.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆற்றங்கரைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் 10 கோடி பனை விதைகளை நடுவோம். · We will plant 10 crore palmyra seeds along riverbanks and coastal areas.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நவீன நீர் மேலாண்மை நுட்பங்களைப் பயன்படுத்தி, நகர்ப்புற வெள்ள பாதிப்புகளின் சுழற்சியை முற்றிலுமாக ஒழிப்போம். · Using modern water management techniques, we will completely eliminate the cycle of urban flood damage.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நிலவும் 'நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை' (Urban Heat Island Effect) கட்டுப்படுத்த 'புராஜெக்ட் ஹீட் ஷீல்ட்' (Project Heat Shield) என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். · A special scheme called 'Project Heat Shield' (Project Heat Shield) will be launched to control the 'Urban Heat Island Effect' (Urban Heat Island Effect) prevailing in the cities of Chennai, Madurai and Coimbatore.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் வெப்பநிலையைக் குறைப்பதற்காக, மத்தியப்படுத்தப்பட்ட 'மாவட்ட குளிர்விப்பு அமைப்புகளை' (Centralised District Cooling Systems) நிறுவுவோம். · To reduce temperatures in densely populated areas, we will install centralised 'district cooling systems' (Centralised District Cooling Systems).

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சென்னையில் உயிர்ப்புடன் உள்ள ஒரே சதுப்பு நிலமான பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டவிரோத ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாத்து, வலுவான வெள்ளக் கட்டுப்பாட்டையும், செழிப்பான பல்லுயிர்ப் பெருக்கத்தையும், நமது நகரத்திற்குப் பாதுகாப்பான, பசுமையான எதிர்காலத்தையும் உறுதி செய்வோம். · We will protect the Pallikaranai marsh, the only living wetland in Chennai, from illegal encroachments, and ensure strong flood control, thriving biodiversity, and a safe, green future for our city.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மாசடைந்த கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை முழுமையாக சீரமைத்து, கழிவுநீர் மாற்றுத் திட்டங்கள் மற்றும் கரையோர மேம்பாட்டுப் பணிகளின் மூலம் சுத்தமான நீர்வழிகளாக மாற்றி சிங்காரச் சென்னையைப் புதுப்பிப்போம். · We will fully restore the polluted Cooum river, Adyar river and Buckingham Canal, turn them into clean waterways through sewage diversion schemes and riverfront development works, and renew Singara Chennai.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பக்கிங்ஹாம் கால்வாயைத் தூர்வாரி புனரமைப்போம். · We will desilt and restore the Buckingham Canal.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாகப்பட்டினத்தில் தனித்துவமான கடலோர தயார்நிலை மையங்கள் (Coastal Preparedness Centres) அமைக்கப்படும். · Dedicated Coastal Preparedness Centres will be set up in Nagapattinam.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

11 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.