வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

5 ஆண்டுகளில் 5 கோடி பனை விதைக்கப்படும். · 5 crore palmyra seeds will be planted in 5 years.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பள்ளி வளாகங்களில் மரங்கள் நடப்பட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி வளாகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும், அறிவியல் முறையிலான கழிவு மேலாண்மை அமைப்புகளும் உருவாக்கப்படும். · Trees will be planted on school campuses, and in the next five years rainwater harvesting systems and scientific waste management systems will be created on all higher secondary and high school campuses.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

காலநிலை மாற்றத்தால் கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து மக்களைக் காத்திட தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். · The measures needed to protect people from the heat that is rising in summer due to climate change will be taken up.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும் மாவட்ட வெப்ப அலுவலர்கள் நியமிக்கப்படுவர். · District heat officers will be appointed in all districts and cities.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உள்ளூர் காலநிலை முன்னறிவிப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண்மின் வலையமைப்பில் (Micro Grids) தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்படும். · For artificial intelligence-based local climate forecasting, automatic weather stations on micro grids (Micro Grids) will be set up in every district.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, கிழக்குத் தொடர்ச்சி மலைப்பரப்பில் வரையறுக்கப்பட்ட வனவிலங்கு வழித்தடங்களில் வெப்ப உணர்விகள் (Thermal Sensors) மற்றும் கேமரா பொறிகளைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்படும். · Artificial intelligence-based early warning systems with thermal sensors (Thermal Sensors) and camera traps will be installed in the designated wildlife corridors in Dharmapuri, Krishnagiri, Coimbatore, Nilgiris and the Eastern Ghats region.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் சவுக்கு, பனை, பூவரசு, புங்கை மற்றும் உள்ளூர் அலையாத்தி வகைகள் போன்ற நாட்டு மரவகைகள் நடப்படும். · Native tree species such as casuarina, palmyra, portia, pongamia and local mangrove varieties will be planted in the coastal areas from Kanniyakumari to Tiruvallur.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சங்க இலக்கியத்தின் ஐந்திணைப் பாகுபாட்டின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை மற்றும் நெய்தல் ஆகிய ஐந்து நிலப்பரப்பு உயிர்ப்பூங்காக்கள் தமிழ்நாடு முழுவதும் சூழலியல் ரீதியான பொருத்தமான இடங்களில் நிறுவப்படும். · Based on the five-landscape (Ainthinai) classification of Sangam literature, five landscape biodiversity parks, Kurinji, Mullai, Marutham, Paalai and Neithal, will be established at ecologically suitable places across Tamil Nadu.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

காடுகள், மலைகள், ஈரநிலங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள 100 சுற்றுலாத்தலங்கள், சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படாத வகையில் நெறிமுறைகள் மற்றும் சமூக மேலாண்மை அடிப்படையிலான சான்றிதழ் பெற்ற நிலையான சுற்றுலா மையங்களாக உருவாக்கப்படும். · 100 tourist sites in forests, hills, wetlands and coastal areas will be developed, without harming the environment, into sustainable tourism centres certified on the basis of guidelines and community management.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கண்காணிப்பு, நாற்றங்கால் மேலாண்மை மற்றும் சீரழிந்த நில மறுசீரமைப்பு ஆகியவற்றில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். · They will be given training in monitoring, nursery management and the restoration of degraded land.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படும் தமிழ்நாட்டின் தனித்துவமான சிவப்பு மணல் திட்டுகளான தேரி நிலங்கள் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் அறிவியல்பூர்வமாக வரையறுக்கப்பட்டு, பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும். · The Teri lands, Tamil Nadu's distinctive red sand dunes found in Thoothukudi, Tirunelveli and Kanniyakumari districts, will be scientifically demarcated through satellite mapping and declared protected zones.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிலைத்தன்மை தரநிலைகளை நிர்ணயிக்க Environmental Social and Governance - ESG கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்படும். · An Environmental Social and Governance - ESG policy framework will be created to set sustainability standards for industries and companies.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

65 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.