வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

ஏரிகள், குளங்கள், ஆறுகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் கலக்கும் கழிவுநீர் முற்றிலுமாகத் தடுக்கப்படும். · Sewage flowing into lakes, ponds, rivers and water bodies will be completely stopped.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆற்றங்கரையோரம் எந்தவித தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படாது. · No factories of any kind will be given permission along riverbanks.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகள், ‘தூய்மைப்படுத்தும் மையத்தை’ சரியான முறையில் செயல்படுத்தவில்லை என்றால், அவர்களின் உரிமம் திரும்பப் பெறப்படும். · If existing factories do not operate their 'treatment plant' properly, their licence will be withdrawn.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கழிவுகளை ஆற்றில் கலக்கவிடும் தொழிற்சாலைகளின் உரிமமும் உடனடியாக திரும்பப் பெறப்படும். · The licence of factories that let waste flow into rivers will also be withdrawn immediately.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆலைகள் கழிவுநீரைத் தூய்மைப்படுத்தி (மறுசுழற்சி நீராக) பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். · Arrangements will be made for factories to treat their wastewater and use it (as recycled water).

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மக்கள் உடல்நலம் காக்கும் அளவிலும் நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நீரைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை நாம் தமிழர் அரசு பாதுகாக்கும். · The Naam Tamilar government will protect the environment by using water in a way that safeguards people's health and controls diseases.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கால்வாய் மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கவும், கரையை வலிமைப்படுத்தவும் பனை, புங்கை, பூவரசு, மூங்கில், வேம்பு, புளி போன்ற மரங்கள் நடப்படும். · To prevent soil erosion and strengthen the banks of canals and water bodies, trees such as palmyra, pongamia, portia, bamboo, neem and tamarind will be planted.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆறு, ஏரி, கண்மாய், கரணை, ஏந்தல், குளம், குட்டை ஆகியவற்றின் கரைகளைச் சுற்றி பனைமரம், வேம்பு, புங்கை, பனிக்கொன்றை, மருதமரம், நாவல், கனிக்கொன்றை, ஆலமரம், பூவரசு, அரசமரம், தேக்குமரம், கோங்குமரம், கடம்ப மரம், மருத மரம், வெட்டி வேர், நாணல் மற்றும் கோரைகள் நட்டு வளர்க்கப்பட்டு, · Around the banks of rivers, lakes, kanmais, karanais, endhals, ponds and kuttais, palmyra, neem, pongamia, panikkondrai, marudham, jamun, kanikkondrai, banyan, portia, peepal, teak, kongu, kadamba, marudha trees, vetiver, reeds and sedges will be planted and grown,

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

யூக்கலிப்டஸ் (கற்பூரத் தைல மரம்) தடை செய்யப்படும் · Eucalyptus (camphor oil tree) will be banned

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மேலும் நொய்யல் ஆறு சாயக்கழிவுகளிலிருந்து காக்கப்பட்டுச் சீரமைக்கப்படும். · Further, the Noyyal river will be protected from dye waste and restored.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கெனத் தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இத்தகைய அயலக மரங்களை வேரோடு அகற்றி, அவ்விடங்களில் மண்ணிற்கு ஏற்ற தேக்கு, சவுக்கு, புளி, வேம்பு, நாவல், மூங்கில், புங்கை, பூவரசு போன்ற மரபுவகை நாட்டு மரங்கள் வளர்க்கப்படும். · Such foreign trees will be removed by the roots, and in those places traditional native trees suited to the soil, such as teak, casuarina, tamarind, neem, jamun, bamboo, pungai and poovarasu, will be grown.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அதனால் நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முற்றுமுழுதாகத் தடுக்கும். · Therefore the Naam Tamilar government will set up special squads and completely stop sand plunder.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஊர் தோறும் இருக்கும் நீர் நிலைகளைச் சுற்றிப் பனை மரங்களை ஏராளமாக நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம். · We will take steps to plant and grow palm trees in large numbers around the water bodies in every village.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

199 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.