வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 202661 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ₹8,000-லிருந்து ₹12,000-ஆகவும், மீன்பிடி குறைநிலை காலத்திற்கான உதவித்தொகையை ₹6,000-லிருந்து ₹8,000-ஆகவும் உயர்த்துவோம். · We will raise the relief amount for the 61-day fishing ban period from ₹8,000 to ₹12,000, and the assistance for the lean fishing period from ₹6,000 to ₹8,000.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 ஓய்வூதியம் வழங்கப்படும். · A pension of ₹2,000 every month will be given to fishermen above 60 years of age.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
61 நாள் மீன்பிடித் தடை காலத்தில் வழங்கப்படும் இழப்பீட்டை ₹8,000-லிருந்து ₹12,000 ஆக உயர்த்துதல் · Raising the compensation given during the 61-day fishing ban period from ₹8,000 to ₹12,000
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீன்பிடி குறைநிலை காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கான சிறப்புப் படியை ₹6,000-லிருந்து ₹8,000 ஆக உயர்த்துதல் · Raising the special allowance for fishing families during the lean fishing period from ₹6,000 to ₹8,000
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் மாதம் ₹2,000 ஓய்வூதியம் வழங்குதல் · Providing a pension of ₹2,000 per month to all fishermen above 60 years of age
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பருவமழை பொய்த்தல் மற்றும் உற்பத்தி பாதிப்பு காலங்களில், உள்நாட்டு மீனவர்களுக்கு மாதம் ₹5,000 உதவித்தொகை வழங்கி, அவசர நிலைகளில் அவர்களின் வருமான நிலைத்தன்மையை உறுதி செய்வோம். · During periods of monsoon failure and production loss, we will provide inland fishermen an assistance of ₹5,000 a month and ensure the stability of their income in emergencies.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
14 கடலோர மாவட்டங்களிலும் வாராந்திர ‘கடல் உணவு சந்தைகளை’ நிறுவுவோம். · We will establish weekly 'seafood markets' in all 14 coastal districts.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
துயரத்தில் உள்ள மீனவர்களுக்கு உதவவும், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் நெருக்கடிச் சூழ்நிலைகளின் போது உதவி வழங்கவும் ‘கடல் ஆம்புலன்ஸ் சேவையை’ அறிமுகப்படுத்துவோம். · To help fishermen in distress and to provide assistance during medical emergencies and crisis situations, we will introduce a 'Sea Ambulance Service'.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அனைத்து ஆழ்கடல், உள்நாட்டு மற்றும் ஆழமற்ற மீன்பிடிப் படகுகளுக்கும் இலவச ஜிபிஎஸ், விஎச்எஃப் ரேடியோக்கள், உயிர் காப்புச் சட்டைகள் மற்றும் வானிலை எச்சரிக்கை கருவிகளைப் பொருத்தி, கடற்கரை முழுவதும் கரையோர உயிர் காப்பு அமைப்புகளை வலுப்படுத்துவோம். · By fitting all deep-sea, inland and shallow-water fishing boats with free GPS, VHF radios, life jackets and weather warning devices, we will strengthen shore-based life-saving systems along the entire coast.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீனவர்களின் பாதுகாப்பையும் சமூக நலனையும் உறுதி செய்ய, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசின் முக்கிய திட்டமான “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் (பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்) கீழ் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும். · To ensure the security and social welfare of fishermen, 3 lakh houses will be built in the next five years under the Union Government's flagship "Pradhan Mantri Awas Yojana" scheme (Prime Minister's housing scheme).
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மீனவர்களுக்கு ஐஸ் பெட்டிகள் கொடுப்பதற்காக, வழங்கப்படும் மானியத்தில் கூடுதலாக 20% மாநில மானியம் வழங்கப்படும் · For providing ice boxes to fishermen, an additional 20% state subsidy will be given on top of the subsidy provided
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தங்களின் படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்ற விரும்பும் பயனாளிகளுக்குத் தேவையான முழுமையான ஆதரவு வழங்கப்படும். · Beneficiaries who wish to convert their boats into deep-sea fishing boats will be given the full support they need.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
12 promises in all.