வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட, இயற்கைப் பேரிடரில் இறந்த மீனவக் குடும்பங்களுக்கு அரசு வேலை. அவர்கள் விரும்பினால் மீன்வளத் துறையிலும் சேரலாம். · Government jobs for the families of fishermen killed by the Sinhala navy or who died in natural disasters. If they wish, they may also join the Fisheries Department.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கடல்தொழிலில் காணாமல் போனோர் குடும்பங்களுக்கு உரிய இழப்புத்தொகை, சிங்களக் கடற்படை தாக்குதல் மற்றும் கடல்தொழிலின்போது, படுகாயமேற்பட்டு உடல் உறுப்பு நிலையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்புத்தொகை வழங்கப்படும். · Due compensation will be given to the families of those who went missing while at sea, and due compensation to those seriously injured and permanently disabled in attacks by the Sinhala navy and during sea work.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கச்சத்தீவு ஒப்பந்தம் நீக்கப்பட்டு, நமது மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். · The Katchatheevu agreement will be annulled, and action will be taken to establish our fishermen's fishing rights. Legal action for this will also be undertaken.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்காகத் தனியே ஒரு சிறப்புக் கடலோரக் காவல் படை, “நெய்தல் படை” என்ற பெயரில் உருவாக்கப்படும். இதில் பெரும்பான்மையான கடலோர மீனவ இளைஞர்கள் இணைக்கப்படுவார்கள். · To protect Tamil Nadu's fishermen, a separate special coastal police force will be created under the name “Neithal Padai”. Coastal fishing youth will make up the majority of its members.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாம் தமிழர் அரசு வழக்குப்பதிவு செய்வதோடு ‘இலங்கைக் கடற்படை மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முறையாக நீதிமன்றத்தை அணுகி, சட்ட நடவடிக்கை எடுக்கும். · The Naam Tamilar government, along with registering a case, will formally approach the court saying 'the Indian government must take action against the Sri Lankan Navy', and will take legal action.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மீனவச் சொந்தங்களின் இழப்பிற்கு, அனைத்து வழிகளிலும் உரிய நீதியைப் பெறுவதற்கான உறுதியை நாம் தமிழர் அரசு அளிக்கிறது. · The Naam Tamilar government gives an assurance that due justice will be obtained, by all means, for the losses of our fishermen kin.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

எந்தக் காரணத்தைக் கொண்டும் மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்படமாட்டார்கள் என்றும், மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டுக் கொண்டு வரப்படும் எந்தத் திட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்றும் நாம் தமிழர் அரசு உறுதி அளிக்கிறது. · The Naam Tamilar government assures that fishermen will not be removed from coastal areas for any reason, and that no project brought in by removing fishermen will be permitted.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

எனவே கடல் அட்டை மீதான தடையை நீக்க நமது அரசு நடவடிக்கை எடுக்கும். மீனவர்களே அவற்றை வளர்த்துப் பெருக்கிக்கொள்ள அனுமதிக்கப்படும். · Therefore our government will take action to remove the ban on sea cucumber. Fishermen themselves will be permitted to rear and multiply them.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கடலுக்குள் கூண்டு வலைகள் கொண்ட பண்ணைகள் அமைத்து அதற்குள்ளாகத் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, நண்டு, சிப்பி, கடல்பாசி, கடல் ஆமை, சிங்கி, பாறை மீன் ஆகியவற்றை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்குத் தேவைப்படும் உதவிகள் அனைத்தும் மீனவர்களுக்கு வழங்கப்படும். · Steps will be taken to set up farms with cage nets in the sea and to rear within them the banned sea cucumber, crab, oyster, seaweed, sea turtle, lobster and rock fish. All the assistance needed for this will be given to fishermen.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒன்றிய அரசுடன் பேச்சு நடத்தி அந்தத் தடையை நீக்கச் செய்து மீன்பிடிக்கும் உரிமை கேட்டுப் பெறப்படும். · By holding talks with the Union government and getting that ban removed, the right to fish will be sought and obtained.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வேளாண் பெருங்குடி மக்களுக்கு இருப்பது போல், மீனவர்களுக்குத் தனியாக வைப்பகம் (நெய்தல் வைப்பகம்) அமைக்கப்படும். · As there is for the farming community, a separate bank (Neithal Bank) will be set up for fishermen.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இந்த ‘நெய்தல் வைப்பகம்’ குறைந்த வட்டியில் மீனவர்களுக்குக் கடன் அளிக்கும். · This 'Neithal Bank' will give loans to fishermen at low interest.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

31 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.