வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

மன்னார் வளைகுடாவில் இந்திய - தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்கவும், தக்க வைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க ஒன்றிய அரசுக்கு த.வெ.க சார்பில் உண்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அழுத்தம் தரப்படும். · On behalf of TVK, sincere and heartfelt pressure will be put on the Union Government to take appropriate steps to restore and retain the traditional fishing rights of Indian - Tamil Nadu fishermen in the Gulf of Mannar.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை முற்றிலுமாகத் தடுக்க ஒன்றிய அரசிடம் உரிய அழுத்தத்துடன் வலியுறுத்தப்படும். · The Union Government will be urged with due pressure to completely stop the arrest of Tamil Nadu fishermen by the Sri Lankan Navy.

TVK · 2026 · நடைபெறுவதாக 1 செய்தி · Reported in progress by 1 report · Manifesto

அந்தந்த உள்ளூர் மீனவர்களே அந்தந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டிகளாகவும், கடலுக்கு அழைத்துச் செல்லும் கடலோடிகளாகவும் செயல்படுவார்கள். · The local fishermen of each area will themselves serve as guides for tourists in that area and as seafarers who take them out to sea.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

இந்த விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற கடலோர மீனவ இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். · Coastal fishermen youth will be given priority to receive training at these sports centres.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். · The fishing ban period relief amount will be raised to 20 thousand rupees.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

பாரம்பரிய முறையில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு வடகிழக்குப் பருவ மழை நிவாரணத் தொகையாக 7000 ரூபாய் வழங்கப்படும். · Fishermen who fish by traditional methods will be given 7000 rupees as northeast monsoon relief.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட மீனவருக்கும் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு வழங்கப்படும். · Every registered fisherman will be provided accident insurance worth 25 lakh rupees.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

கடலில் விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடும் மீனவர்களுக்கு உதவும் வகையில் செயற்கைகோள் தொழில்நுட்பத்தோடு செயல்படும் கடல் ஆம்புலன்ஸ்கள் ஒவ்வொரு பெரிய மீன்பிடித் துறைமுகத்திலும் அமைக்கப்படும். · To help fishermen caught in accidents at sea and fighting for their lives, sea ambulances operating with satellite technology will be set up at every major fishing harbour.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

கடலில் செயலிழந்து நிற்கும் படகுகளை மீட்க இழுவைப் படகு வசதி அமைக்கப்படும். · A tug boat facility will be set up to rescue boats that have broken down at sea.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் 1800 லிட்டரில் இருந்து 3600 லிட்டராக உயர்த்தப்படும். · The diesel subsidy for fishing boats will be raised from 1800 litres to 3600 litres.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

கூடுதலாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் மானியம் படகு உரிமையாளர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். · Additionally, a subsidy of 15 rupees per litre will be credited directly to the boat owner's bank account.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

இந்தியாவிலேயே முதன்முறையாக இறால், மத்தி, அயிலா, கணவாய் ஆகிய மீன்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும். · For the first time in India, a minimum support price will be fixed for prawn, sardine, mackerel and squid.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

அதிகளவு இந்த மீன்கள் சந்தைக்கு வரும்போது ஏற்படும் விலைச்சரிவால் மீனவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பற்றாக்குறைத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். · To prevent fishermen being hurt by the price fall when these fish come to market in large quantities, the shortfall amount will be credited directly to the fishermen's bank accounts.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

32 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.