வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026“நலமுடன் தமிழ்நாடு 2030” என்ற திட்டத்தின்படி தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 இலட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சமாகவும் உயர்த்தப்படும். · Under the "Healthy Tamil Nadu 2030" (Nalamudan Tamil Nadu 2030) scheme, so that everyone who needs it gets adequate medical insurance, the annual income limit for enrolment in the Chief Minister's Medical Insurance Scheme will be raised to Rs.5 lakh, and the insurance cover to Rs.10 lakh.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சென்னை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் இருப்பது போன்று கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும். · As in the Chennai and Kanchipuram government hospitals, modern cancer treatment facilities will be set up in the government medical college hospitals in the districts of Cuddalore, Thanjavur, Madurai, Thoothukudi, Tirunelveli, Ramanathapuram, Salem, Tiruppur, Viluppuram, Tiruvannamalai and Coimbatore.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தாய்சேய் நலனில் IMR மற்றும் MMR குறைக்கும் தரவரிசையில் இந்தியாவிலேயே முதல் இடம்பெற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். · In mother and child welfare, special measures will be taken to secure first place in India in the ranking for reducing IMR and MMR.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மண்டல அளவில்- தஞ்சாவூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய இடங்களில் உயர்சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும். · At the zonal level, super-speciality hospitals will be set up at Thanjavur, Viluppuram and Dharmapuri.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழ்நாட்டில் இளம் வயதினர் உயிரிழப்பிற்கும், வாழ்நாள் குறைவதற்கும் காரணமான இதய நோய்கள், நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்கள், சுவாச நோய், செரிமானம் சார்ந்த நோய்கள் உள்ளிட்ட முதன்மையான பத்து தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். · A special scheme will be implemented to control and prevent the ten leading non-communicable diseases, including heart diseases, diabetes, kidney damage, cancers, respiratory disease and digestive diseases, which cause deaths among young people and shortened lifespans in Tamil Nadu.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். · Special camps will be held to detect diabetes, high blood pressure, cancer and the like at an early stage.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மண்டல அளவில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும். · Artificial fertility (assisted conception) centres will be started at the zonal level.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மண்டல அளவில் பல்நோக்குச் சிறப்பு கண் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். · Multi-purpose speciality eye care centres will be set up at the zonal level.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நடுத்தர வர்க்கத்தினர் அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகளைப் பெற, தனியார் காப்பீடு வைத்திருக்கும் மருத்துவப் பயனாளிகளும் பயன்பெறும் வகையில், காப்பீட்டுச் சிறப்புப் பகுதி விரிவுபடுத்தப்படும். · So that the middle class can use the facilities in government hospitals, the special insurance wing will be expanded so that patients holding private insurance can also benefit.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைந்து சட்டமியற்றியவாறு அது தொடங்கப்படும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் மருத்துவமனை, சிகிச்சை அளிப்பதுடன் சித்த மருத்துவத்தை நவீனமயமாக்கும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும். · The obstacles to starting the Siddha Medical University will be removed and it will be started as legislated. The hospital attached to this university will, besides giving treatment, carry out scientific research to modernise Siddha medicine.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பாரம்பரிய மருத்துவமனை ஆவணப்படுத்துதல்: தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் குறித்த அனைத்துத் தரவுகளும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் ஆவணப்படுத்தப்படும். · Documenting traditional medicine: all data on the traditional Siddha medical systems in Tamil Nadu will be documented through the Tamil University, Thanjavur.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
152 promises in all.