வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026நீர்வளத்தைக் கொள்ளையடிக்கும், மாந்த குலத்திற்குக் கேட்டை ஏற்படுத்தும் செயற்கையான மது வகைகள் அனைத்தும் தடை செய்யப்படும். · All artificial kinds of liquor, which plunder water resources and cause harm to humankind, will be banned.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சர்க்கரைக்கு மாற்றாக, நோயற்ற வாழ்வுக்காக மக்கள் இதைப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். · Awareness will be created so that people use these as an alternative to sugar, for a disease-free life.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனைத்து வகை மருத்துவங்களும் கட்டணமில்லாமல் வழங்கும் முறையில் காப்பீட்டுத் திட்டங்களை அரசு வழங்கும். · The government will provide insurance schemes under which those engaged in farming receive every kind of medical treatment free of charge.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஆண்டுதோறும் தவறாமல் முழு உடல் பரிசோதனை செய்யும் முறையைக் கொண்டு வருவோம். · We will bring in a system of a full body check-up every year without fail.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தற்போதைய கணக்குப்படி 30,000 மக்கள் தொகைக்கு ஓர் ‘ஆரம்பச் சுகாதார நிலையம்' என்றிருக்கின்றது. அது. 10,000 பேருக்கு ஓர் தொடக்க நல வாழ்வு மருத்துவ மையமாக மாற்றப்படும். · At present there is one 'primary health centre' for a population of 30,000. This will be changed to one primary wellness medical centre for 10,000 people.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அனைத்து தொடக்க நல வாழ்வு மருத்துவ மையங்களிலும் குருதி பரிசோதனை மையம், காந்த அதிர்வலை கருவி (MRI Scan) இதய நோயைக் கண்டறியும் கருவி (ECG) புற்றுநோயைக் கண்டறியும் கருவி முதலியவை அமைக்கப்படும். · A blood testing centre, a magnetic resonance machine (MRI Scan), a machine to detect heart disease (ECG), a machine to detect cancer and the like will be installed in all primary wellness medical centres.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இங்கு நச்சுக்கடி முறிவு மருந்து, நாய்க்கடிக்கான ஊசி / மருந்து ஆகியவை இருக்குமாறு உறுதி செய்யப்படும். · It will be ensured that anti-venom for poisonous bites and injections / medicine for dog bites are available here.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இரண்டு மருத்துவர்கள், 3 செவிலியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவார்கள். · Two doctors and 3 nurses will work in shifts.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிற்றூர்களில் இருந்து சற்றொப்ப 20 அயிரமாத்திரி (km) தொலைவிற்குள் ஒரு சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்படும். ஏற்கனவே இருப்பவை மேலும் தரம் உயர்த்தப்படும். · A speciality hospital will be built within about 20 kilometres (km) of the villages. Those that already exist will be further upgraded.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிறப்பு மருத்துவமனையில் கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மாரடைப்புத் தடுப்பு மருத்துவம், தோல் மருத்துவம், எலும்பு முறிவு கட்டு, சிறியவகை அறுவை மருத்துவம் ஆகியவை அளிக்கப்படும். · Eye, ear, nose and throat treatment, heart attack prevention treatment, skin treatment, fracture setting and minor surgery will be provided in the speciality hospital.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நான்கு மருத்துவர்கள், 5 செவிலியர்கள் சுழற்சி முறை பணியில் இருப்பார்கள். · Four doctors and 5 nurses will be on duty in shifts.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இது அதிகளவிலான படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவாகச் செயல்படும். · It will function as an inpatient wing with a large number of beds.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு சிறப்பு மருத்துவமனை செயல்படுத்தப்படும். · A speciality hospital will be run in every district headquarters town.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இங்கு இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட அனைத்துவித உயர் அறுவை மருத்துவங்களும் வழங்கப்படும். · All kinds of advanced surgery, including heart, brain, kidney and liver, will be provided here.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
117 promises in all.