வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

ஆதிதிராவிடர் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, தரமான சாலைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்படுத்தித் தரப்படும். · In all areas where Adi Dravidars live, basic facilities including safe drinking water, toilets, quality roads and community halls will be provided over the next 5 years at an estimated cost of 2000 crore rupees under the Ayothidasa Pandithar Habitation Development Scheme.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சாலை வசதி இல்லாத தொல்குடியினர் வகிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சாலை வசதி அமைத்துத் தரப்படும். · Roads will be built on a priority basis to areas inhabited by indigenous tribal people that have no road access.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பக்தர்கள் அதிகளவு கூடும் திருக்கோயில்களில் போதுமான சுகாதார வசதிகள், ஓய்வறைகள், குடிநீர் மற்றும் தரமான உணவு தடையின்றி கிடைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்படும். · In temples where devotees gather in large numbers, the works being carried out so that adequate sanitation facilities, rest rooms, drinking water and quality food are available without interruption will continue to be taken forward well.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ்நாட்டின் பத்து முதன்மைச் சுற்றுலாத் தலங்களிலும் 100 அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களிலும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். · Basic facilities will be improved, with an allocation of one thousand crore rupees, at Tamil Nadu's ten main tourist destinations and at 100 lesser-known tourist destinations.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சுற்றுலாத்துறையில் புதிய சேவைகளை வழங்கி வரும் கேரவன் (Caravan) வாகனச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் முக்கியச் சுற்றுலாப் பகுதிகளில் அவற்றிற்கான சிறப்பு வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். · To promote caravan (Caravan) vehicle tourism, which is offering new services in the tourism sector, special parking facilities for them will be provided in major tourist areas.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கிராமங்கள் வளர்த்தெடுக்கப்படும். கிராமச் சந்தைகள், விளையாட்டு மற்றும் நல வாழ்வுக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். · Villages will be developed on the concept of providing urban facilities in rural areas. Village markets, and sports and wellness infrastructure, will be created.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கிராமப்புற நீர்நிலைகளைச் செம்மைப்படுத்தி காத்தல், கிராமங்களைப் பசுமையாக்குதல், வேளாண் சாராத கிராமப்புற வேலைவாய்ப்பினை வழங்குதல், குறைந்த அரசு செலவில் அதிக பயன்பெறுதல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய நோக்கங்களை அடைய உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும். · To achieve the aims of improving and protecting rural water bodies, greening villages, providing non-farm rural employment, getting greater benefit at lower government cost, and sustainable development, the Uthamar Gandhi Model Villages scheme will be implemented.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முதலமைச்சர் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூபாய் 10,000 கோடி மதிப்பீட்டில் சீர்செய்யப்படும். · Under the Chief Minister's Village Road Scheme, 15 thousand km of roads will be repaired at an estimated cost of Rs. 10,000 crore.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அடுத்த 5 ஆண்டுகளில் 30,000 கி.மீ நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள், நீண்டகாலம் நிலைத்திருக்கும் வகையில் மேம்படுத்தப்படும். · In the next 5 years, 30,000 km of rural roads will be upgraded to last a long time.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

“ஊரகச் சாலைகள் பராமரிப்பு நிதியம்” தொடங்கி, அதன்மூலம் அனைத்துக் காலநிலைகளுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் கிராமப்புறச் சாலைகள் பராமரிக்கப்படும். · A “Rural Roads Maintenance Fund” will be started, and through it rural roads will be maintained to a good standard, suited to all weather conditions.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதற்கென விரிவான ஊரகக் கட்டடங்கள் பராமரிப்புக் கொள்கை வகுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டு இத்தகைய பொதுப்பயன்பாட்டுக் கட்டடங்கள் பராமரிக்கப்படும். · For this, a comprehensive rural buildings maintenance policy will be framed. A total of Rs. 2,000 crore will be allocated for the next 5 years and such public-use buildings will be maintained.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

261 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.