வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

மக்கள் பயன்பாட்டிற்காகப் படித்துறைகள் அமைக்கப்படும். · Bathing ghats (steps) will be built for public use.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இந்த இடங்களில் மீனவர்களின் நலன் வேண்டி தூண்டில் வளைவுப் பாலம் அமைக்கப்படும். · In these places, groynes (curved breakwaters) will be built for the welfare of fishermen.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அவர்களுக்குத் தமிழக அரசின் கட்டுமானப் பணிகளில் உரிய ஏற்பிசைவும், குத்தகைப் பணிகளும் வழங்கப்படும். · They will be given due recognition and contract works in the Tamil Nadu government's construction works.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அங்கே உயர்தரத் தங்கும் விடுதிகள், திரையரங்குகள், வணிகவளாகங்கள் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக்கப்படும். · High-quality lodges, cinemas and shopping complexes will be built there and it will be made a very large tourist destination.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இங்கு தங்கும் விடுதிகள், கலையரங்கக்கூடம் உட்பட பல்வேறு வசதிகளோடு சிறந்த சுற்றுலாத்தலமாக நிறுவப்படும். · It will be established here as a fine tourist destination with various facilities, including lodges and an arts auditorium.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முதன்மையான கோயில்களில் தங்கிச் செல்வதற்காக, மிகக் குறைந்த கட்டணத்தில், தனியார் தங்கும் விடுதிகளுக்கு நிகரான புதிய தங்கும் விடுதிகள் கட்டப்படும். · For staying at major temples, new lodges equal to private lodges will be built, at a very low charge.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாம் தமிழர் அரசு கண்ணகிக்குத் தனிக்கோட்டம் அமைத்துத் தமிழக வனப்பகுதி வழியாகவே பாதையை அமைத்துத் தரும். · The Naam Tamilar government will set up a separate shrine for Kannagi and lay a path through the Tamil Nadu forest area itself.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதைக் கருத்தில் கொண்டு நாம் தமிழர் அரசு புதிய சாலை வசதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும். · Keeping this in mind, the Naam Tamilar government will implement new road facility policies.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அதற்கேற்ப சாலை வசதிகளைத் தொலைநோக்குப் பார்வையோடு நாம் தமிழர் அரசு திட்டமிட்டு மேம்படுத்தும். · Accordingly, the Naam Tamilar government will plan and improve road facilities with a long-term vision.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

காலமாற்றத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகளைக் கொண்ட தரமான சாலைகளையும் போக்குவரத்துக் கட்டமைப்பையும் நாம் தமிழர் அரசு செயல்படுத்தும். · The Naam Tamilar government will put in place quality roads and a transport infrastructure with structures improved to suit the changing times.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

புதிதாகப் போடப்படும் சாலைகள் குறைந்தது ஐந்தாண்டிற்கு உறுதி குலையாத தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்குள் சிதைவுகள் ஏற்பட்டால் அந்தப் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் ஒப்பந்த ஏற்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். · Newly laid roads must remain sound for at least five years. If damage occurs within that time, strict action will be taken against the contractors and engineers responsible for that area.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அந்தந்தப் பகுதிகளிலேயே அரசுச் செலவில் அடுக்குமாடி ஊர்தி நிறுத்தக் கட்டட வசதிகள் அமைக்கப்படும். · Multi-storey vehicle parking buildings will be set up at government expense in each area.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நகரங்களில், புதிதாகச் சாலை போடுவதற்கு முன்பாகவே, தொலைபேசி இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவுநீர், குடிநீர்க் கால்வாய் இணைப்பு ஆகிய துறைகளுடன் கலந்துரையாடி, அதற்கேற்ற கட்டமைப்புகள் அமைத்துவிட்டு பின் புதிய சாலைகள் அமைக்கப்படும். · In cities, before laying a new road, the telephone, electricity, sewage and drinking-water pipeline departments will be consulted, the matching infrastructure will be built, and only then will new roads be laid.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

குறைந்தது ஐந்தாண்டுகள் அந்தச் சாலைகள் தோண்டப்படாமல் பழுதில்லாமல் இருக்கும். · Those roads will remain undug and free of damage for at least five years.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

51 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.