வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். · Schemes to increase business and employment opportunities for Adi Dravidar, Scheduled Tribe, Most Backward Class and Denotified Community women will be expanded.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஆண்டுக்கு ரூ. 20 இலட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் உயர்நிலைப் பணி வாய்ப்புகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு முதலீட்டு ஊக்க மானியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். · Private companies that give senior job opportunities paying more than Rs. 20 lakh a year to Adi Dravidar, Scheduled Tribe, Most Backward Class and Denotified Community people will be given investment incentive subsidies and other concessions.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மேலும் இத்திட்டத்தின் மூலம் ட்ரோன்கள் இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், வேலைவாய்ப்பு பெறவும் வழிவகை செய்யப்படும். · Further, through this scheme, training will be given in operating drones, and steps will be taken so that youth, especially women, obtain employment.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
முதல்வர் படைப்பகங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும். · The Mudhalvar Padaippagams will be extended to all Assembly constituencies.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் மையங்கள், முதல்வர் படைப்பகங்கள் ஆகியவை போட்டித்தேர்வு பயிற்சி மையங்களாகவும் செயல்படுத்தப்படும். ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்காக UPSC, SSC, RRB போன்ற அமைப்புகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நமது இளைஞர்கள் வெற்றி பெறும் வகையில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு உயர்தரப் பயிற்சி வழங்கப்படும். · The knowledge centres and Mudhalvar Padaippagams set up across Tamil Nadu in the last 5 years will also be run as competitive exam coaching centres. High-quality coaching by excellent trainers will be given so that our youth succeed in the competitive exams held by bodies such as UPSC, SSC and RRB for Union government posts.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதைத் தொடர்ந்து தொகுத்து வழங்கும் அமைப்பு உருவாக்கப்படும். · A body will be created that continuously compiles and provides information on where job opportunities for persons with disabilities are available.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களும் விரிவுபடுத்தப்படும். · Schemes to increase occupational opportunities for Adi Dravidar and tribal women will also be expanded.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி போன்ற துறைகளில், பயிற்சிகள் வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். · Training will be given in fields such as textiles, leather garments, handicrafts and computer vocational training, and social and economic progress will be ensured for Backward Class, Most Backward Class and minority people.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். · Skill development centres will be set up in districts where minorities live in large numbers.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிறுபான்மை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு சிறப்புத் திறன் பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும். ஆண்டுக்கு 25,000 இளைஞர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். · Special skill training classes will be started for minority young men and young women. This training will be given to 25,000 young people a year.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அடுத்த 5 ஆண்டுகளில் 5 இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். திறன் மிகுந்த கட்டுமானத் தொழிலாளர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவார்கள். · Over the next 5 years, 5 lakh construction workers will be given skill and skill development training with modern technology. Highly skilled construction workers will be developed into new entrepreneurs.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
90 promises in all.