வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்கள். · Vocational training and skill development: employment training centres for youth.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதன்மூலம் வேளாண்மை வளப்படுத்தப்பட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். · Through this, agriculture will be enriched and government employment will be created for many thousands of people.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இது பல்லாயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறையாக மாற்றப்படும். · This will be turned into a sector that provides many thousands of new jobs.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அதோடு அவர்கள் விரும்பினால் நிலத்தில் வேலை செய்யலாம். அதற்குண்டான ஊதியமும் வழங்கப்படும். · In addition, if they wish, they can work on the land. The wages for that will also be paid.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கால்நடைகளை வளர்த்தல், பேணிக்காத்தல், கண்காணித்தல் உள்ளிட்ட வேலைகள் வழங்கப்படும் · Jobs including rearing, caring for and monitoring livestock will be provided

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

படிக்காதவர்களுக்குக் கால்நடைப் பண்ணை, இயற்கை உர உருவாக்கம் மற்றும் காய்கறிப் பண்ணைகளில் அரசு வேலை வழங்கப்படும். · People without formal education will be given government jobs in livestock farms, natural fertiliser production and vegetable farms.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

படித்த இளைஞர்கள் விற்பனைப் பொறுப்பாளர்களாக (Sales Representatives) அமர்த்தப்படுவர். · Educated youth will be appointed as sales representatives (Sales Representatives).

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பனைப்பொருள் சார்ந்த தொழிற்சாலைகள் மாவட்டந்தோறும் நிறுவப்பட்டு, அதன் மூலம் அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புத் தரப்படும். · Palm-product factories will be set up in every district, and through them employment will be given to the people of each area.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் மட்டைகள், நார், ஆகியவற்றில் இருந்து கயிறு வகைகள், அழகுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தயாரிக்கும் ‘சிற்றூர்ப் பரம்பரைத் தொழிற்கூடத்தை’ அந்தந்தப் பகுதியிலேயே தொடங்கி அதன் மூலம் வருமானத்தைப் பெருக்குவதை, வேலை வாய்ப்பை உருவாக்குவதைச் செயல்படுத்துவோம். · We will start, in each area itself, a 'village traditional workshop' that makes everything including kinds of rope and decorative items from the husks and fibre of the coconut tree, and through it we will raise incomes and create employment.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கைவினைத் தொழில் செய்வோர் அதில் ஊழியர்களாக அமர்த்தப்படுவார்கள். · Handicraft workers will be employed in them as staff.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இத்தகைய ஒருங்கிணைந்த பண்ணைகள் மூலம் வேளாண் குடிகளுக்கு ஆண்டு முழுவதும் வருவாய் கிடைக்கும் வகையில், வேலையின்மை சிக்கலும் தீர்க்கப்படும். · Through such integrated farms, farming families will earn income all year round, and the problem of unemployment will also be solved.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அதனால் ஆடு மாடு மேய்த்தல் உள்ளிட்ட வேளாண் தொழில் அனைத்தையும் அரசுப் பணியாக அறிவிக்கின்றோம். · Therefore we declare all farm work, including grazing goats and cattle, to be government jobs.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆடு - மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும். · Those who work in goat and cattle rearing, the farm work connected with it, and the natural fertiliser production centres will all be declared government employees. All benefits for government employees will be given to them.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பருத்தியிலிருந்து நூல் நூற்பது மற்றும் ஆடை தயாரிப்பது ஆகிய பணிகள் அரசுப் பணியாக மாற்றப்படும். · The work of spinning yarn from cotton and making clothes will be made government work.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

104 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.