வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026உபசரிப்பு, உணவுத் தயாரிப்பு, சுற்றுலா வழிகாட்டி, நீர் விளையாட்டுப் பாதுகாப்பு மேலாண்மை, கலைத்திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய 12 வாரப் பயிற்சி வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும். · 12-week training courses covering hospitality, food preparation, tourist guiding, water sports safety management and arts skill development will be introduced.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். · Employment will be ensured for those who pass them.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படும். · Suitable employment opportunities will be created for them.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்படும். · Opportunities for self-employment will also be created.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். · Skill development centres will be established in every district.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
திருநர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். · Skill development training will be provided so that transgender persons can obtain employment.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சுய உதவிக் குழுக்கள் அமைக்கவும், சுய வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவி செய்யப்படும். · Help will be given to form self-help groups and to create self-employment.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருடப் பணி அனுபவம் பெற்றதும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். · Temporary employees appointed on a contract basis in government jobs, including teachers and nurses, will be appointed as permanent employees once they gain 5 years of work experience.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் ‘கிரேடு - டி’ அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். · All Anganwadi workers will be made 'Grade - D' government employees, and on that basis they will be paid a salary of 18000 rupees a month.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அங்கன்வாடி உதவியாளர்களுக்கும், சுகாதார விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஆஷா பணியாளர்களுக்கும் மாத ஊதியம் 10,000 ரூபாய் என்பது உறுதி செய்யப்படும். · A monthly salary of 10,000 rupees will be ensured for Anganwadi helpers and for ASHA workers who carry out health awareness work.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் இதுவரை ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு, மேற்சொன்ன நவீன இயந்திரங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆப்பரேட்டர்களாக நியமிக்கப்படுவார்கள். · Workers who have so far been engaged in removing human waste will be given training to operate the above-mentioned modern machines and will be appointed as operators.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம் இயற்றப்பட்டு, அவர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக அந்தஸ்து உறுதி செய்யப்படும். · A Tamil Nadu Gig Workers Act will be enacted, and their social status, including job security, will be ensured.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஸ்விகி, ஜொமேட்டோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் துரிதப் பணியாளர்கள் இ-பைக் வாங்குவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். · Interest-free loans will be given to gig workers working in companies such as Swiggy and Zomato to buy e-bikes.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
சாலையோர வியாபாரம் முறைப்படுத்தல் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சாலையோர வியாபாரத்திற்கான சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். · Under the Street Vending Regulation and Livelihood Protection Act, special zones for street vending will be set up in every urban local body.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
46 promises in all.