வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தரும் வகையில், போதைப் பொருள் விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் பகிர்வதற்கு ‘போதைப் பொருள் தகவல் மையம்’ உருவாக்கப்படும். · To identify those involved in drug-related crimes and secure due punishment quickly, a 'Drug Information Centre' will be created for the public to share information about those who sell and use drugs.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இளஞ்சிவப்பு ரோந்துப் பணிகள் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துதல், தேவையான இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்துதல், காவலன் செயலியை மேம்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வோம். · We will further ensure women's safety through measures such as extending pink patrols to all urban areas, installing CCTV cameras where needed, and upgrading the Kaavalan app and raising awareness of it.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
குழந்தைகள் பாதுகாப்பிற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு குழந்தைநலத் தமிழ்நாடு உருவாக்கப்படும். · A special law for the protection of children will be enacted and a child-welfare Tamil Nadu will be created.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துபவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரும் வகையில் போக்சோ நிதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். · Additional POCSO courts will be set up so that those who commit crimes against children are punished quickly.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
காவல்துறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்கப்படும். · In the police department, various promotions will be given without delay at fixed intervals.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் வகையில் கட்டப்படும் காவல் குடியிருப்புகளில் நூலகம் மற்றும் சமூகநலக்கூடம் அமைக்கப்படும். · A library and a community welfare hall will be set up in the police quarters being built to house about 500 families.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பழைய காவலர் குடியிருப்புக்களுக்கு பதில் புதிய குடியிருப்புக்கள் கட்டித் தருவதோடு, குடியிருப்புக்களின் எண்ணிக்கையை உயர்த்தி பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். · New quarters will be built in place of old police quarters, and action will be taken to increase the number of quarters and remove the shortage.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். · One crore rupees will be given to the family of a police personnel who dies while on duty maintaining law and order.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய, சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். · Cyber police stations will be created to eradicate cyber crimes against women.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம் கட்டப்படும் . · An integrated court complex will be built in Krishnagiri.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள பெண்கள் சிறைச்சாலை நகருக்கு வெளியே மாற்றப்படும் . · The women's prison in the Marakkadai area of Tiruchi will be moved outside the city.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படும் . · An integrated court complex will be built at Kovilpatti.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மரக்காணத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படும் . · An integrated court complex will be built at Marakkanam.
DMK · 2021 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
13 promises in all.