வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

சென்னை மாநகரக் காவல் சட்டப் பிரிவு 41 மற்றும் BNSS 163 (முன்பு CrPC 144) ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, அமைதி வழியில் போராடும் மக்களாட்சி உரிமையைத் தடுப்பது உடனடியாக நிறுத்தப்படும். · The misuse of Section 41 of the Chennai City Police Act and BNSS 163 (formerly CrPC 144) to block the democratic right to protest peacefully will be stopped immediately.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நீர் நிலைகளை வன்கவர்பு செய்பவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும். · A law will be enacted to give severe prison sentences to those who encroach on water bodies.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இவ்வகையான உடல் உறுப்பு திருட்டில் ஈடுபடும் இடைத்தரகர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு உரிமமும் திரும்பப் பெறப்படும். · Strict legal action will be taken against middlemen, officials and doctors involved in such organ theft, and their licences will also be withdrawn.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பாலியல் குற்றங்கள் ஆகியவற்றுக்கெதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, இத்தகைய குற்றங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும். · Laws against sexual crimes will be made stricter, and such crimes will be completely stopped.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும். · The death penalty will be carried out on offenders who commit rape.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களைச் செய்வோருக்குக் கடுமையான தண்டனை என்ற சட்டம் இயற்றப்படும். · A law providing severe punishment for those who commit sexual crimes against children will be enacted.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

குழந்தைகளைக் கைவிடும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கான குடும்ப அட்டை, அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு உதவிகள் மற்றும் உரிமைகள் நிறுத்தப்படும். · Along with strict action against parents who abandon their children, all government assistance and entitlements for them, including the family card and identity card, will be stopped.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இனிவரும் காலத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு குடும்ப அட்டை, அடையாள அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும், அரசு சலுகைகளும், வேலைவாய்ப்புகளும் மறுக்கப்படும். · In the coming period, children who abandon their parents will be denied all entitlements including the family card, identity card and electricity connection, as well as government concessions and jobs.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முறையான அனுமதியில்லாமலும் சட்டத்திற்குப் புறம்பாகவும் நடத்தப்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்படும். அவர்களின் பின்னணி குறித்த தகவல்களைச் சேகரித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். · All business establishments being run without proper permission and outside the law will be shut down. Information about their background will be collected and appropriate action will be taken.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சமூகக் குற்றவாளிகளின் மிரட்டல்கள், திருட்டு, கொள்ளை நிகழ்வுகள் ஏதும் நடக்காமல் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். · Adequate protection will be provided to all business establishments so that no threats from criminals, thefts or robberies take place.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

2025ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சென்னையில் நடைபெற்ற தூய்மைப் பொறியாளர்கள் போராட்டங்களின்போது, அமைதியான முறையில் உரிமைகளைக் கோரிய தூய்மைப் பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் புனைவு வழக்குகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படும்.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஊர்க்காவல் படையினரின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் தகுந்த ஊக்கத்தொகை உயர்த்தப்படும். · Accepting the long-standing demands of the Home Guards, a suitable incentive will be raised so as to improve their economic condition.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

69 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.