வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முழு அங்கீகாரத்தினை இலங்கை அரசு வழங்க ஒன்றிய அரசு மூலமாக வலியுறுத்துவோம். · We will urge, through the Union government, that the Sri Lankan government give full recognition to the just demands of the Sri Lankan Tamils.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மலையகத் தமிழர் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும் பாகுபாடின்மையையும் உறுதி செய்யும் ஒரு கூட்டாட்சி முறையை நிறுவ வலியுறுத்துவோம். · We will urge the establishment of a federal system that ensures equality and non-discrimination for all citizens, including the Malaiyaga (Hill Country) Tamils.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இசுலாமிய மக்களின் அடக்கத் தலங்களுக்கு இயன்ற இடங்களில் இடம் ஒதுக்கப்படும். · Land will be allotted for Muslim burial grounds wherever possible.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
திராவிட மாடல் 1.0 அரசு 19 உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, தமிழ்நாட்டை உலக விளையாட்டு வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து தொய்வில்லாது நடத்தி, தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுகளும் தழைத்தோங்குவது உறுதிசெய்யப்படும்.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
விளையாட்டுத்துறையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களுக்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் உண்டு உறைவிட விடுதிகளில் (Sports Hostels) உள்ள விளையாட்டு வீரர்களின் அறைகள் குளிரூட்டப்பட்ட அறைகளாக மேம்படுத்தப்படும். · The rooms of sportspersons in the residential hostels (Sports Hostels) run by the Sports Development Authority for youth with interest and talent in sports will be upgraded to air-conditioned rooms.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும். · Quality sports hostels with food and accommodation facilities will be set up in all districts.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்’ அமைக்கப்படும். · 'Chess training centres' will be set up in every district.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 5 கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும் வழங்கப்படும். · Those who win a gold medal at the Olympics will be given 5 crore rupees, those who win a silver medal 3 crore rupees, and those who win a bronze medal 2 crore rupees.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒலிம்பிக் தனிநபர் போட்டிகளில் பங்குபெறத் தகுதிபெறும் வீரர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், குழுப் போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெறுவர்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும். · An incentive of 20 lakh rupees will be given to athletes who qualify to take part in Olympic individual events, and 10 lakh rupees each to those who qualify to take part in team events.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்படும். · Athletes who win medals at the Olympic Games will be given a house by the government.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உலகத் தரத்திலான 400 மீட்டர் Synthetic தடகள ஓடுதளங்கள் அமைக்கப்படும். · World-class 400 metre synthetic athletics tracks will be laid in all district sports complexes.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், தற்காப்புக் கலை, வாள்வீச்சு விளையாட்டுகளுக்கான பல்நோக்கு வசதிகொண்ட உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதை உறுதி செய்யப்படும். · It will be ensured that multipurpose indoor stadiums for basketball, volleyball, badminton, martial arts and fencing are present in all districts.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒலிம்பிக் தரத்திலான ஸ்கேட்டிங் பூங்காக்கள் நிறுவப்படும். · Olympic-standard skating parks will be established.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நீச்சல் குளங்கள் அமைக்கப்படும். · Swimming pools with infrastructure facilities will be built in all districts.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
60 promises in all.