இடஒதுக்கீட்டை முழுமையாக எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். · We will make every effort to implement reservation fully at all levels.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
இடஒதுக்கீட்டை முழுமையாக எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். · We will make every effort to implement reservation fully at all levels.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநாட்டிட இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வருவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். · We will urge the Union government to make the constitutional amendment needed to bring a system of reservation into the appointment of High Court judges, so that social justice is established there.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒன்றிய அரசின் உயர்பதவிகளிலும், பொதுத்துறை நிறுவனங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், தேசிய சட்டப்பள்ளிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படாத அநீதியை எதிர்ப்போம். · We will oppose the injustice of the 27% reservation for Other Backward Classes, as recommended by the Mandal Commission, not being fully implemented in the Union government's senior posts, in public sector undertakings, and in higher education institutions such as the I.I.T.s, I.I.M.s, AIIMS and National Law Schools.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சட்டபூர்வமாகத் தரப்பட்டுள்ள இடஒதுக்கீடு எண்ணிக்கையானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்; அது தொடர்ந்து கண்காணிக்கப்படும். · The reservation numbers granted by law will be implemented in full, and this will be continuously monitored.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு நடைமுறையை மாற்றி, அதற்குப் பதிலாக மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றிட ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். · We will urge the Union government to change the All-India quota system in medical colleges in Tamil Nadu and to follow the State government's reservation policy instead.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் எடுக்கப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும். · Arrangements will be made for due representation, based on data from the caste-wise census to be taken with the national population census.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் திருநர் - திருநங்கையர் நலவாழ்வுக் குழு (TWC – Transgender Welfare Committee) அமைக்கப்படும். · At the district level, a Transgender Welfare Committee (TWC – Transgender Welfare Committee) headed by the Collector will be set up.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாநில அளவில் பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் - திருநங்கையர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவர். · At the state level, transgender persons who work with distinction in various fields will be selected and honoured with an award every year.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இளம் திருநர், திருநங்கையர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், ஆதரவுக் கரம் நீட்டிடவும் Helpline உருவாக்கப்படும். · A Helpline will be created to give young transgender persons the counselling they need and to extend a helping hand to them.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
2030-ஆம் ஆண்டுக்குள், வீட்டு மனையற்ற தகுதியுள்ள ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். · By 2030, step-by-step action will be taken to give a house-site patta to every eligible Adi Dravidar and tribal family that has no house site.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
2006 வன உரிமைகள் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு உரிமைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to grant rights to the tribal people of Tamil Nadu under the 2006 Forest Rights Act.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பாரம்பரிய மேய்ச்சல் சமூக மக்களுக்கு வன நிலங்களில் உள்ள உரிமையை உறுதி செய்து சமூக வன உரிமை வழங்கப்படும். · The rights of traditional grazing communities over forest lands will be secured, and community forest rights will be granted to them.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தேவைப்படும் அனைத்து இடங்களிலும் ‘சமூகநீதிக் கல்லூரி விடுதிகள்’ திறக்கப்படும். · 'Social Justice College Hostels' will be opened in all places where they are needed.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
27 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.