வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்கள் நெரிசலின்றிச் செல்ல வசதியாகக் காலையும், மாலையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். · In areas where colleges are located, additional buses will be run in the morning and evening so that students can travel without crowding.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கும், மின்பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு நகரத்திலும் தனித்துவமான மின்னூட்ட நிலையங்கள் அமைக்கப்படும். · Electric bus service will be extended to the cities of Tiruchirappalli, Salem, Tirunelveli, Erode and Thanjavur as well. Dedicated charging stations will be set up in each city.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சாலைகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை மேம்படுத்தி, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதுடன், பாதுகாப்பான சாலைப்பயணம் உறுதி செய்யப்படும். · By improving the design and construction of roads, deaths caused by road accidents will be reduced and safe road travel will be ensured.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் புதிதாக நவீன வசதிகளைக் கொண்ட 10,000 புதிய பேருந்துகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம். · In the next 5 years, we will bring in a further 10,000 new buses with modern facilities for public use.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பேருந்துப் போக்குவரத்தால் அதிக நெரிசல் ஏற்படக் கூடிய மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள்/முனையங்கள் (Integrated Bus Terminus) அமைக்கப்படும். · New integrated bus stands/terminals (Integrated Bus Terminus) will be set up in corporations, municipalities and town panchayats where bus traffic causes heavy congestion.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள முக்கிய பேருந்து நிறுத்துமிடங்கள் அனைத்திலும் பயணிகள் அமரும் வசதிகளுடன் கூடிய தரமான பேருந்து நிழற்குடைகள் (Bus Shelters) அமைக்கப்படும். · Quality bus shelters (Bus Shelters) with seating for passengers will be set up at all major bus stops in urban and rural areas.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

குறுகிய அணுகு சாலைகள் கொண்ட கடைக்கோடிப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் சிற்றுந்து வசதிகள் விரிவுபடுத்தப்படும். · Mini-bus services will be expanded so that all people living in remote areas with narrow access roads benefit.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் ரயில் சேவைகளைப் பயன்படுத்திடும் வகையில் குறுகலான சாலைகளிலும் சிற்றுந்துப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்படும். · Mini-bus transport will be introduced even on narrow roads so that people living in areas next to metro and electric train routes in Chennai and its suburbs can also use the train services.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய அகலப்பாதைத் திட்டம், மொரப்பூர் – தருமபுரி புதிய அகலப்பாதை, மதுரை – தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) புதிய அகலப்பாதை ஆகிய திட்டங்களை அறிவித்துவிட்டு பல ஆண்டுகளாக நிதி ஒதுக்காமல் இரயில்வேதுறை கிடப்பில் போட்டுள்ளது. இந்தத் திட்டங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

விழுப்புரம் – பண்ருட்டி - கடலூர் – சீர்காழி – மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் – (Doubling) விரிவாக்கம் செய்யப்பட்ட வேண்டும்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தாம்பரம் – செங்கல்பட்டு (4-ஆவது பாதை) விரிவாக்கப்பட வேண்டும்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி புதிய அகலப்பாதை,

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தை இணைக்கக்கூடிய செங்கல்பட்டு – அரக்கோணம் (காஞ்சிபுரம் வழியாக) அகல இரயில்பாதை இரட்டிப்பாக்குதல்.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

103 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.