வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

மாநில எல்லைக்குள் பயணிக்கும் தொடர் வண்டி நிருவாகத் துறையினை நாம் தமிழர் அரசு இந்திய அரசியலைப்புச் சட்டமாற்றம் மூலம் கையகப்படுத்தும். · The Naam Tamilar government will take over the administration of railways running within the state's borders through an amendment to the Indian Constitution.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

65 அகவை நிரம்பியவர்கள், தமிழ்நாட்டிற்குள் விருப்பப்பட்ட இடங்களுக்குச் சென்று வர, ஆயுட்கால பயண அட்டை வழங்கப்படும். · Those who have completed 65 years of age will be given a lifetime travel card to travel to places of their choice within Tamil Nadu.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழக அரசே ‘உலா’ என்கிற மேம்பட்ட ஊர்தி ஓட்டும் மென்பொருளை (Mobile App) அறிமுகப்படுத்தும். · The Tamil Nadu government itself will introduce an advanced vehicle-driving software (Mobile App) called 'Ula'.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதில் தனியார் நிறுவனங்கள் பெறக்கூடிய அதிகப்படியான சேவைக் கட்டணங்களுக்கு மாற்றாக, மிகக் குறைந்த அளவிலான நிருவாகக் கட்டணம் மட்டுமே பெறப்படும். · In this, instead of the excessive service charges that private companies collect, only a very small administrative fee will be collected.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஓட்டுநர்களின் உடல்நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பணி நேரம் முறைப்படுத்தப்படும். · Considering drivers' health and road safety, their working hours will be regulated.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேணுதற் செலவுகளைக் கணக்கில் கொண்டு, பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் சரியான பயணக் கட்டணங்கள் அமைக்கப்படும். · Taking into account fuel price rises and maintenance costs, fair fares will be set in a way that does not burden the public.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சாலைகள் அனைத்தும் முழுமையாக எண்ணியல்மயமாக்கப்பட்டு (Digitization), மேம்படுத்தப்பட்ட கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும். · All roads will be fully digitised (Digitization) and advanced surveillance devices will be installed.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

போக்குவரத்துக் காவலர்கள் சாலைகளில் வெயிலில் நின்று பணியாற்றும் நிலை மாற்றப்பட்டு, சாலையோரங்களில் அமைக்கப்படும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். · The situation of traffic police working while standing in the sun on roads will be changed, and they will carry out monitoring work from air-conditioned rooms set up by the roadside.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வளைவுகள் மற்றும் சந்திப்புகளில் அனைத்துக் கோணங்களிலும் பயணங்களைக் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக் கருவிகள் ஒருங்கிணைக்கப்படும். · Surveillance devices will be integrated at bends and junctions so as to monitor traffic from all angles.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முதன்மையான இடங்கள் மற்றும் பள்ளிப் பகுதிகளில், ஊர்தி ஓட்டிகளை அறிவுறுத்தும் வகையில் தானியங்கி ஒலிபெருக்கிகள் அமைக்கப்படும். · Automatic loudspeakers will be installed at important locations and school zones to advise vehicle drivers.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

விதிமீறல்களில் ஈடுபடும் ஊர்தி ஓட்டிகள் கண்டறியப்பட்டு, உடனடியாகக் கட்டுப்பாட்டு அறை மூலம் இடைமறிக்கப்பட்டுத் தண்டனைத் தொகை விதிக்கப்படும். · Vehicle drivers who commit violations will be identified, immediately intercepted through the control room, and fined.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒவ்வொரு விதிமீறலும் ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்யப்படும். ஆறு முறைக்கு மேல் விதிமீறல்களில் ஈடுபடும் ஆட்களின் ஓட்டுநர் உரிமம் நிலையாக மறுக்கப்பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஊர்திகளை இயக்கத் தடை விதிக்கப்படும். · Every violation will be recorded on the driving licence. Those who commit violations more than six times will have their driving licence permanently revoked and will be banned from driving vehicles for life.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே, சரியான சாலை நடத்தை, போக்குவரத்து விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் இடரான சூழ்நிலைகளைத் தவிர்ப்பது போன்ற அடிப்படைத் திறன்களைக் கற்பதை நாம் தமிழர் அரசு கட்டாயமாக்கும். · The Naam Tamilar government will make it compulsory for students, during their school years themselves, to learn basic skills such as proper road behaviour, traffic rules, safety practices and avoiding dangerous situations.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

44 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.