வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

டெல்டா மாவட்டங்களில் 10,500 கி.மீ மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 5,000 கி.மீ நீளத்திற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். · Desilting works will be carried out on 'C' and 'D' category channels over a length of 10,500 km in the delta districts and 5,000 km in the non-delta districts.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வேளாண்மைக்கு ஆதாரமான நீரைச் சேமிக்க நுண்ணீர்ப் பாசனம் 21 இலட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும். · To save water, the basis of agriculture, micro-irrigation will be expanded to 21 lakh hectares.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். · One thousand rainwater harvesting structures will be built in the Western and Eastern Ghats.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கால்வாய்கள் - மதகுகள் புனரமைக்கப்பட்டு, நீர் மேலாண்மையைச் சீர்செய்து, தண்ணீர் தட்டுப்பாடான பகுதிகள் வளமான பகுதிகளாக மாற்றப்படும். · Canals and sluices will be renovated, water management will be set right, and water-scarce areas will be turned into fertile areas.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஊரகப் பகுதிகளில் மாபெரும் நீர் மேலாண்மைத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். · A massive water management scheme will be created and implemented in rural areas.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் நீர்நிலைகள் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு புனரமைக்கப்படும். · Through this, in the next 5 years, 20 thousand water bodies will be desilted, their bunds strengthened, and restored.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அவற்றில் உள்ள மதகுகள், கலுங்குகள் ஆகியவைச் சீர்செய்யப்படுவதுடன், நீராடுதுறை போன்ற கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படும். · The sluices and surplus weirs in them will be repaired, and construction works such as bathing ghats will also be carried out.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆகாயத்தாமரை போன்ற தாவர இனங்களின் பெருக்கம் சீரான நீரோட்டத்திற்கும், பாசனத்திற்கும், பெரும் சிக்கலாக உருவாகி உள்ளது. இவற்றைத் தொடர்ந்து அப்புறப்படுத்தி நீரோட்டத்தைச் சீராக்குவோம். · The spread of plant species such as water hyacinth has become a major problem for smooth water flow and irrigation. We will continuously remove them and restore the water flow.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு, அந்த நீர்நிலைகளைச் சுற்றி நடைபாதைகள் அமைத்து, மக்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்திடும் வகையில் மாற்றி அமைக்கப்படும். · All water bodies in urban areas will be restored, walkways will be built around those water bodies, and they will be redesigned so that people can use them regularly.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ்நாட்டின் அடுத்த 30 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவை, வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளுக்கான தேவைகளைக் கணக்கிட்டு, ஆய்வு செய்து அத்தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் ‘தமிழ்நாடு நீர்ப்பாதுகாப்புச் செயல்திட்டம் 2056’ உருவாக்கப்படும். · Calculating and studying Tamil Nadu's drinking water needs and the needs of agriculture and industries for the next 30 years, a 'Tamil Nadu Water Security Action Plan 2056' will be created to meet those needs.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ்நாட்டில், தேவைப்படும் மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலைப் பரவலாக்கவும் பெரிய நீர்த்தேக்கங்கள் (Reservoirs) புதிதாக உருவாக்கப்படும். · In Tamil Nadu, new large reservoirs will be created in the districts that need them, to increase drinking water distribution and to spread out water supply.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கடலோரப்பகுதியில் கடல்நீரிலிருந்து நன்னீராக்கும் ஆலைகள் உருவாக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். · Seawater desalination plants will be built in coastal areas, and steps will be taken so that the water factories need is available without shortage.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அனைத்துத் திருக்கோயில் திருக்குளங்களிலும் தூர்வாரி நீர் சேகரிப்பு அளவு உயர்த்தப்படும். · All temple tanks will be desilted and their water storage capacity increased.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

292 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.