வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைகள் நலவாரியச் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தும் பொருட்டு அரசு மூலம் கூடுதல் நிதியுதவி ரூ. 5 கோடி வழங்கப்படும். · Additional funding of Rs. 5 crore will be given by the government to further improve the working of the Tamil Nadu Folk Arts Welfare Board.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அவர்களது பணிக்காலத்திலும் அயல்நாட்டு பணி காலத்திற்குப் பின்னரும் பலனளித்து பாதுகாக்கும் வண்ணம் ஒரு விரிவான “வெளிநாடு வாழ் தமிழர் நலக் கொள்கை” ஒன்று உருவாக்கப்படும். · A comprehensive "Overseas Tamils Welfare Policy" will be created to benefit and protect them both during their working period and after their period of work abroad.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அயலக வாழ் தமிழர் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு கேரள அரசின் NORKA Roots மாதிரியில் அதன் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். · The Overseas Tamils Welfare Department will be given additional fund allocation, and its services will be expanded on the model of the Kerala government's NORKA Roots.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வெளிநாட்டு வேலைக்குச் சென்று அங்கு விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடும் அவரது உறவுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு தொழிற்கடன் உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to provide compensation to the families of workers who go abroad for work and die in accidents there, and to provide business loan assistance to their relatives so that they are not affected economically.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு எண்ணிக்கையினை உயர்த்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். · The necessary measures will be taken to increase the number of registrations in the Overseas Tamils Welfare Board.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழ்நாட்டில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஒரு NRT உதவி மையத்தினை அமைத்து அயலகத் தமிழர்களுக்கு அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்க உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். · An NRT help centre will be set up at each of the 4 international airports in Tamil Nadu, and suitable initiatives will be taken to explain to overseas Tamils the welfare schemes the government is carrying out.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

குழந்தைகள் பாதுகாப்புக்கான அனைத்து அமைப்புகளும் முழு அளவில் செயல்படுவது உறுதி செய்யப்படும். · It will be ensured that all bodies for child protection function fully.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அனைத்துக் குழந்தைகளுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம். · We will ensure that social security schemes reach all children.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

குழந்தைத் தொழிலாளர் அறவே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம். · We will make Tamil Nadu a state with no child labour at all.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

குழந்தைகளுக்கான உதவி எண் 1098 செயல்பாடு உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும். · The functioning of the children's helpline number 1098 will be raised to world standard.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முதியோர் உதவித்தொகை ரூ. 1,200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். · The old age pension will be raised from Rs. 1,200 to Rs.2000.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்கு அன்புச்சோலைகள் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும். · The Anbucholaigal scheme for the well-being of senior citizens will be extended across the whole of Tamil Nadu.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1500-இல் இருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும். · The assistance for persons with disabilities will be raised from Rs. 1500 to Rs. 2,500.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத கடுமையான குறைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான (Persons With Severe Disabilities) மாதாந்திர பராமரிப்பு மானியத் தொகை ரூ. 2000-லிருந்து ரூ. 4,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். · The monthly maintenance grant for persons with severe disabilities (Persons With Severe Disabilities) who cannot take care of themselves will be raised from Rs. 2000 to Rs. 4,000.

DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

89 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.