வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026வேளாண் தொழிலைச் சார்ந்த அனைவரும் ஆண்டுக்கு சில மாதங்கள் வேலையற்று இருக்கும் நிலை ஏற்படுகிறது. அந்தக் காலகட்டங்களில் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். · Everyone who depends on farming is left without work for a few months every year. Financial assistance will be given to them during those periods.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அறுபது வயதுக்கு மேற்பட்ட வேளாண் குடிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். · A monthly pension will be given to farmers above sixty years of age.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர் உருவாக்கப்படும். · A separate ministry and a separate minister will be created for persons with disabilities.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், எளிமையாக அணுகத்தக்க வகையில் சாய்வுதளம், கழிவறை, மின்தூக்கி, வாகனம் நிறுத்துமிடம், படிகளில் சிறப்புக் கைப்பிடி போன்ற மற்ற வசதிகள் உருவாக்கப்படும். · In government and private buildings used by the public, ramps, toilets, lifts, parking spaces, special handrails on stairs and other such facilities will be created so that persons with disabilities can use them and access them easily.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
புதியதாகக் கட்டப்படும் கட்டடங்களில் சாய்வுதளம் மற்றும் மின்தூக்கி அமைப்பதற்கான வரைப்படத்தில் குறிப்பிடவில்லையெனில் கட்டட உரிமம் நீக்கப்படும். · For newly constructed buildings, if the plan does not specify the installation of a ramp and a lift, the building licence will be revoked.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாற்றுத்திறனாளிகள், மகிழுந்து (Taxi), தானி (Autorickshaw) போன்றவைகளைக் கைகளால் இயக்கி வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணம் முறைப்படி சட்டத்திற்கு உட்பட்டு அல்லது திருத்தப்பட்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் சிறப்புக் கடன் வசதிக்கான திட்டம் உருவாக்கப்படும். · So that persons with disabilities can earn a livelihood by operating vehicles such as cars (Taxi) and auto-rickshaws (Autorickshaw) by hand, a scheme for driving licences and special loan facilities will be created, properly within the law or by amending it.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் (மனவளர்ச்சி உட்பட) அவர்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டாக வாழக்கூடிய (Community Living) வீடுகளோ அல்லது மனைகளோ அமைத்துக் கொள்ள உதவிகள் செய்யப்படும். · Severely affected persons with disabilities (including intellectual disability) will be helped to set up, according to their wishes, houses or homes where they can live together (Community Living).
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிக் கருவிகளை உருவாக்கி, சீராக்கம் செய்வதற்கானப் பணிமனை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும். · A workshop for making and repairing assistive devices for persons with disabilities will be created in every district.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இதைப்போலவே, வயது வந்த, ஆதரவற்ற, மனவளர்ச்சி குன்றியோருக்குக் காப்பகங்கள் உருவாக்கப்படும். · Similarly, homes will be created for adult, destitute persons with intellectual disabilities.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிறார் வேலைக்குச் செல்வது முற்றாக ஒழிக்கப்படும். · Children going to work will be completely eradicated.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் தேவைகள் மற்றும் நலனில் அரசு தனிக்கவனம் செலுத்திப் பேணிக் காக்கும். · The government will pay special attention to the needs and welfare of affected children and will care for and protect them.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சிறப்புக் குழந்தைகள், கைவிடப்பட்டக் குழந்தைகள், மீளா வறுமையில் வாழ்விழந்து வேலைக்குச் செல்லும் சிறார்கள், இடம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரின் நலனுக்காக, ‘அன்புத்தளிர்’ அமைக்கப்படும். · For the welfare of special children, abandoned children, children who have lost their livelihood in unending poverty and go to work, and the children of migrant workers, ‘Anbuthalir’ will be set up.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இங்கிருந்தபடியே இவர்கள் படித்து உயர் பணிகளில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் வரை நாம் தமிழர் அரசு துணையாக இருக்கும். · The Naam Tamilar government will stand by them until, staying here, they study and establish themselves in high positions.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
80 promises in all.