வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும். · All women heads of families will be given an assistance of ₹2,000 every month, and every family will be given ₹10,000 as one-time financial assistance.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதற்காகத் தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம். · For this, we will ensure an unhindered 'Zero-FIR' (Zero-FIR) registration system, protection for victims and witnesses, special fast-track courts to try heinous cases including sexual and POCSO offences, 100% surveillance camera (CCTV) coverage in buses, schools and universities, and full use of the 'Nirbhaya' fund.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். · Women-led cooperative societies, self-help groups and micro, small and medium enterprises (MSME) will be given interest-free loans of up to ₹50 lakh to set up production units.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும். · A 20% reservation (Procurement Quota) for women-owned enterprises in government procurement will be made mandatory.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ₹25,000 மானியம் வழங்கப்படும். · A subsidy of ₹25,000 will be given to eligible women to buy electric two-wheelers (e-scooters).

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழகக் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்குவோம். · We will provide a monthly assistance of ₹2,000 to all women heads of families in Tamil Nadu.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் (POCSO) உள்ளிட்ட கொடூர குற்றங்களுக்கு விரைந்து நீதி வழங்க, ‘சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்’ நிறுவப்படும். · To deliver swift justice for heinous crimes, including sexual violence against women and children (POCSO), 'Special Fast-Track Courts' will be established.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மத்திய அரசின் ‘நிர்பயா நிதி’ சிறந்த முறையில் முழுமையாகப் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும். · The best and full use of the Union Government's 'Nirbhaya Fund' will be ensured.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசுக் கொள்முதலில், பெண்கள் நடத்தும் வணிக நிறுவனங்களுக்கு 20% இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும். · In government procurement, a 20% reservation for women-run business enterprises will be made mandatory.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தகுதியுள்ள பெண்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் (E-scooters) வாங்க ₹25,000 மானியம் வழங்கப்படும். · A subsidy of ₹25,000 will be given to eligible women to buy electric two-wheelers (E-scooters).

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பல்கலைக்கழகங்களில் ‘ராணி வேலு நாச்சியார் பெண்கள் கண்காணிப்புப் பிரிவுகள்’ நிறுவப்படும். · 'Rani Velu Nachiyar Women's Monitoring Units' will be established in universities.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பிரத்யேகக் காவல்துறை சாவடிகள் அமைக்கப்படுவதோடு, பாலியல் தொல்லைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கையும் சமரசமற்ற தீர்வையும் உறுதி செய்ய, காலக்கெடுவுடன் கூடிய விசாரணைகளை மேற்கொள்ளும் ‘உள் புகார்கள் குழு’ (Internal Complaints Committee) கட்டாயமாக்கப்படும். · Along with setting up dedicated police outposts, to ensure immediate action and an uncompromising resolution against sexual harassment, an 'Internal Complaints Committee' (Internal Complaints Committee) conducting time-bound inquiries will be made mandatory.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இந்த மாற்றத்தை முன்னின்று வழிநடத்தப் பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும். · Women will be given due authority to lead this change from the front.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

22 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.