வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026இயற்கை வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்கள் தயாரிப்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பு உருவாக்கப்படும். · A role for women's self-help groups will be created in the production of the inputs needed for natural farming.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
“இல்லத்தரசி” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளிலேயே மேற்கூறிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும். · A new scheme called “Illatharasi” will be implemented. Under this scheme, all homemakers of families that do not pay income tax will be given a coupon of 8 thousand rupees per family, so that they can buy the above-mentioned household appliances at shops in the areas where they live.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். · The Kalaignar Magalir Urimai Thogai will be raised from one thousand rupees a month to 2000 rupees.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
சுயஉதவிக் குழுக்களில் சிறிய அளவில் தொழில் செய்வோர், தொழிலாளர்கள் ஆகியோர் தொழில் முனைவோர்களாக முன்னேறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை முதலீட்டுடன் தொழில் தொடங்க, மானியத்துடன் வங்கிக் கடனுதவி, பிணை எதுவுமின்றி வழங்கப்படும். · So that small-scale business operators and workers in self-help groups can advance as entrepreneurs, subsidised bank loans, without any collateral, will be provided to start businesses with an investment of up to 5 lakh rupees.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இந்தப் புதிய பெண் தொழில்முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். · All the help needed to market the products made by these new women entrepreneurs will be provided.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நவீன உற்பத்தி முறை பயிற்சிகள் வழங்கப்படும். · Training in modern production methods will be given to women's self-help groups.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இத்தகைய பயிற்சி பெற்ற பெண்கள், தொழில் முனைவோராகத் தேவையான நவீனக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு பொதுநல மையத்தில் (Common Facility Centre) வைக்கப்படும். மூலப்பொருட்களை இம்மையங்களுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யத்தக்க முழுமையான பொருட்களாக மாற்றி எடுத்துச் செல்லும் வசதி ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும். · The modern equipment that women who have received such training need to become entrepreneurs will be purchased and placed in a Common Facility Centre. A facility to bring raw materials to these centres and take them away as finished, saleable products will be created in every district.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பல்வேறு வகையான தொழில்களில் சிறந்து விளங்கிடும் பெண் தொழில்முனைவோர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சர் விருது வழங்கப்படும். · Women entrepreneurs who excel in various kinds of businesses will be selected and given the Chief Minister's award every year.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் சுமார் 5 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் அவற்றின் தகுதி அடிப்படையில் தேவைக்கேற்ப, அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் வழங்கப்படும். · There are about 5 lakh self-help groups in villages and urban areas. Bank loans amounting to 2 lakh crore will be given in the next 5 years to each group according to need, on the basis of their eligibility.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அரசின் கொள்முதலில் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to give priority in government procurement to products made by self-help groups.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தனியார் நிறுவனங்களில் உயர் நிர்வாக வேலைவாய்ப்புகளைப் பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கச் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இப்படி உயர் ஊதிய வேலைகளில் அமர்த்தப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10 விழுக்காடு அந்நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். · A special scheme will be implemented to encourage women to obtain senior management jobs in private companies. 10 percent of the salary paid to women placed in such high-paying jobs will be given to those companies as a subsidy.
DMK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
31 promises in all.