வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026எனவே பெண்களுக்குச் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் (பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல்) தனித்தொகுதிகள் போராடிப் பெறப்படும். · Therefore, reserved constituencies for women in the Legislative Assembly and in Parliament (like those reserved for Scheduled Castes) will be won through struggle.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நாம் தமிழர் அரசு உணர்ந்து, கல்வி, அரசியல் அதிகாரம் உட்பட அனைத்திலும் அவர்களுக்கான சமனிய உரிமையை உறுதி செய்யும். · The Naam Tamilar government, realising this, will ensure equal rights for them in everything, including education and political power.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பெண் கருக்கொலை முற்றிலும் ஒழிக்கப்படும். கருவில் ஊடுநோக்கி (Scan) மூலம் பாலின அறிவிப்புத் தடைச் சட்டம் முழுவீச்சாக நடைமுறைப்படுத்தப்படும். இச்சட்டத்தை மீறும் மருத்துவமனைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும். · Female foeticide will be completely eradicated. The law prohibiting disclosure of sex through a scan (Scan) of the foetus will be enforced in full force. Severe punishment will be given to hospitals and parents who violate this law.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இதற்கு எதிராகவும், சமூகத்தில் பெண்களின் முதன்மைத்தன்மை குறித்தும் விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும். · Awareness campaigns will be carried out against this and on the primacy of women in society.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கட்டாயச் சீர் கொடுமைகளுக்கு எதிராக நாம் தமிழர் அரசு கடுமையானச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும். · The Naam Tamilar government will implement strict laws against dowry atrocities.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு அரசு வேலை உட்பட எந்த உதவிகளும், உரிமைகளும் வழங்கப்படமாட்டாது. · Those who engage in this act will not be given any assistance or entitlements, including government jobs.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சரிபாதி வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும். · Half of the job opportunities in all departments of the Tamil Nadu government will be given to women.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படும். · Equal opportunity will be given to women in the field of sports.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
காவல்படை, கடற்படை, சிறப்புக் காவல், வானூர்திப் போக்குவரத்து, மென்பொருள் / வன்பொருள் உருவாக்கம், நீதித்துறை என அனைத்திலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி, பெண்களின் பேராளுமை உறுதி செய்யப்படும். · By creating opportunities in all fields, such as the police, the navy, special police, air transport, software / hardware development and the judiciary, the strong presence of women will be ensured.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழினத்தின் வீர மங்கையர்கள் பெயரில் வேலைவாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். · Employment schemes will be created in the names of the heroic women of the Tamil race.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மேலும் பெண்களுக்கு அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிக்க, வேலை நேரம் ஆறு மணி நேரமாகக் குறைக்கப்படும். · Further, so that women can look after their children and family, their working hours will be reduced to six hours.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வீட்டிலிருந்தபடி கணினி வழியே பணிபுரியவும் வழிவகை செய்யப்படும். · Provision will also be made for working from home through computers.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்குச் செல்லும் பெண்களுக்குப் பணியிடத்தில் எந்த அச்சமுமின்றி வேலை செய்ய ஏதுவாக, பாலியல் வன்கொடுமைத் தடைச்சட்டங்கள் கடுமையாக்கப்படும். · So that women who go to work in government and private institutions can work without any fear at the workplace, the laws prohibiting sexual harassment will be made stricter.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
குற்ற முறையீடு அளிக்கும் பெண்களின் தரவுகள் கமுக்கமாக வைக்கப்படும். · The details of women who file complaints will be kept confidential.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
31 promises in all.