வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

பெண்களுக்கு பெண் ஊழியர்களும், ஆண்களுக்கு ஆண் ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள். · Women staff will be appointed for women and men staff for men.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

பெண் காவலர்கள் பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்படுவது நிறுத்தப்படும். அவர்கள் முன்களக் காவலர்களாக பணியமர்த்தப்படுவது உறுதி செய்யப்படும். · Deploying women police personnel on bandobast duties will be stopped. It will be ensured that they are deployed as frontline police personnel.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வயது வந்த பெண்கள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் நலனுக்கான தனிப்பிரிவு அமைக்கப்படும். · A separate wing for the safety and welfare of adult women and girl children will be set up under the direct supervision of the Chief Minister.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் அவர்கள் 60 வயதை எட்டும்வரையில், அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும். · Every woman head of family, until she reaches 60 years of age, will have Rs 2500 credited to her bank account every month.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, மாவட்டங்களுக்கிடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். · The Vetri Payanam scheme, under which women travel free in all town, city and inter-district government buses running across the state, will be implemented.

TVK · 2026 · நிறைவேற்றப்பட்டதாக 2 செய்திகள் · Reported done by 2 reports · Manifesto

ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம்(1சவரன்) தங்கமும், பட்டுச் சேலையும் வழங்கப்படும். · At weddings in families with an annual income of less than Rs 5 lakh, the bride will be given 8 grams (1 sovereign) of gold and a silk saree.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

வறுமையில் வாடும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாத உதவித்தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். · Widows living in poverty and destitute women will be given Rs 3 thousand as a monthly allowance.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் · Women's self-help groups will be given interest-free loans of up to Rs 5 lakh

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

சிறு-குறு தொழில் முனைவோராக மாற முனையும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திருப்பிச் செலுத்தத் தேவையற்ற வகையில் 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். · Women's self-help groups seeking to become small and micro entrepreneurs will be given Rs 5 lakh as a non-repayable investment subsidy.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். · Women's self-help groups that have performed well for 5 consecutive years will be given an incentive of Rs 1 lakh.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வகையில் இ-காமர்ஸ் பிளாட்பார்ம் உருவாக்கப்படும். · An e-commerce platform will be created to market products made by women's self-help groups internationally.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

அப்படிக் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் 40 சதவிகிதம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் சிறு-குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். · Of the goods so procured, 40 percent will be procured from women's self-help groups and the small and micro enterprises run by them.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 நகரங்களில் பெண்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் கட்டமைப்புகளுடன் கூடிய சிறப்பு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். · Special industrial estates with facilities that fully meet women's needs will be set up in 10 cities: Chennai, Kovai, Madurai, Trichy, Salem, Vellore, Tiruppur, Thanjavur, Thoothukudi and Tirunelveli.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

25 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.