வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும். · All women heads of families will be given an assistance of ₹2,000 every month, and every family will be given ₹10,000 as one-time financial assistance.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும். · 3 free gas cylinders will be given every year. They will be given at the festivals of Pongal, Tamil New Year and Deepavali.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இதற்காகத் தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம். · For this, we will ensure an unhindered 'Zero-FIR' (Zero-FIR) registration system, protection for victims and witnesses, special fast-track courts to try heinous cases including sexual and POCSO offences, 100% surveillance camera (CCTV) coverage in buses, schools and universities, and full use of the 'Nirbhaya' fund.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். · Women-led cooperative societies, self-help groups and micro, small and medium enterprises (MSME) will be given interest-free loans of up to ₹50 lakh to set up production units.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும். · A 20% reservation (Procurement Quota) for women-owned enterprises in government procurement will be made mandatory.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம். · We will declare the Thaipusam festival a state festival.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம். · We will ensure that the tradition of lighting the Karthigai Deepam on the summit of Thiruparankundram hill is restarted, and that it is protected for all time.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும். · To create a drug-free Tamil Nadu, a 'Tamil Nadu Drug Eradication Department' with a special anti-narcotics force wing will be created.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கடல்வழி கடத்தலைத் தடுக்க ‘கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு’, துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். · A 'Coastal Narcotics Intelligence Unit' to prevent smuggling by sea, a dedicated helpline number for quick action, and special fast-track courts will be set up.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். · Action will be taken to award the death penalty under the NDPS Act to repeat offenders and drug-trafficking gangs.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

‘உழவே தலை’ திட்டத்தைத் தொடங்கி, பிஎம்-கிசான் நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 கூடுதலாக வழங்கி, ஆண்டுக்கு மொத்தம் ₹9,000 நிதியுதவி வழங்குவோம். · We will launch the 'Uzhave Thalai' scheme and, giving an additional ₹3,000 as the state government's share along with the PM-Kisan assistance, provide a total financial assistance of ₹9,000 a year.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மாநிலக் கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டு, 100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) நிறுவப்படும். · A State Cooperative Cotton Producers' Society will be formed, and cotton ginning mills (Ginning Mills) will be established within a distance of 100 km.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

295 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.