வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ₹10 லட்சம் வட்டியில்லா கடன் · An interest-free loan of ₹10 lakh for first-generation graduate students

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வேலைவாய்ப்பின்மை காரணமாக இ.எம்.ஐ (EMI) செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி · Education loan waiver for those unable to pay their EMI because of unemployment

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி, மாவட்டந்தோறும் தமிழ் வழியிலும் பயிற்சி அளிக்கும் போட்டித் தேர்வு மையங்கள், திறன் கணக்கெடுப்பு மற்றும் தொழில்துறையுடன் இணைந்த பயிற்சிகள் வழங்கப்படும். · Free coaching for students who score high marks, competitive examination centres in every district that also teach in the Tamil medium, a skills survey and industry-linked training will be provided.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) துறைகளில் செய்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பிரத்யேக வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். · To prepare students who have passed Class 12 for the future, dedicated weekly training classes with practical training in Artificial Intelligence (AI) and Robotics will be provided at every block resource centre.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நவீன காலத் தொழில்நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களை வழங்கும் தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவி, மாநிலத்தின் அனைத்து மண்டலங்களிலும் அதன் வளாகங்களை அமைப்போம். · We will establish a Tamil Nadu State Skill Development University offering courses on modern-day technologies, and set up its campuses in all zones of the state.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

முதல் தலைமுறை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை வட்டியில்லா கல்விக் கடன் வழங்கப்படும். · Interest-free education loans of up to ₹10 lakh will be provided to first-generation undergraduate and postgraduate degree students.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வேலைவாய்ப்பின்மை காரணமாக இ.எம்.ஐ (EMI) செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். · Education loans will be waived for those unable to pay EMI (EMI) because of unemployment.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிநவீன திறன்களையும், செயல்முறைப் புத்தாக்கங்களையும் அளித்து அவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செய்முறை ஆய்வகங்களுடன் கூடிய பிரத்யேகமான வாராந்திர ஒரு மணி நேர செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் பயிற்சி வழங்கப்படும். · With the aim of preparing students who have passed Class 12 for the future by giving them cutting-edge skills and practical innovations, dedicated weekly one-hour artificial intelligence and robotics training with practical laboratories will be provided at every block resource centre.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

12 ஆம் வகுப்பு நிறைவு பத்திரம் அறிமுகப்படுத்தப்படும். 12 ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர் திரும்பப் பெறும் வகையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) உள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு 8 ஆம் வகுப்பு மாணவியின் பெயரிலும் ₹50,000-ஐ அரசு வைப்பு நிதி வைக்கப்படும். · A Class 12 completion bond will be introduced. The government will place a deposit of ₹50,000 in the name of every Class 8 girl student from families below the poverty line (BPL), to be withdrawn after successfully completing Class 12.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசுப் பள்ளிகளில் மதிய உணவில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்தி, சிறுதானிய நுகர்வை ஊக்குவித்தல் · Introducing millets in the midday meal in government schools and encouraging millet consumption

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகத் தரத்திலான கடல்சார் கல்லூரி (Maritime College) நிறுவப்படும். · A world-class Maritime College (Maritime College) will be established in Ramanathapuram district.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

11 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.