வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026இரும்புச் சத்து – போலிக் ஆசிட் நிறைந்த அரிசி, விட்டமின் ஏ, விட்டமின் டி நிறைந்த சமையல் எண்ணெய், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவை அனைவருக்கும் ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். · Rice rich in iron – folic acid, cooking oil rich in vitamin A and vitamin D, and fortified wheat flour will be distributed to everyone through ration shops.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் கிளினிக்குகள் தொடங்கப்படும். ஒவ்வொரு நடமாடும் கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பிஸியோதெரபிஸ்ட் இருப்பார். · 1000 mobile elderly clinics will be launched across Tamil Nadu for senior citizens. Each mobile clinic will have one doctor, one nurse and one physiotherapist.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் இவர்கள் நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை செய்வர். நாள்பட்ட வியாதிகளுக்கான மருந்துகள் வழங்கப்படும். · They will go in person to every village panchayat across Tamil Nadu and conduct free health check-ups. Medicines for chronic diseases will be provided.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
இந்த மையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். · In these centres, pregnant women will be provided services free of charge, including food and medical assistance and continuous medical monitoring.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
9 முதல் 14 வயதுள்ள சிறுமிகள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் ஹெச்.பி.வி (HPV) தடுப்பூசிகள் போடப்படும். · HPV vaccines will be given free of charge to all girls aged 9 to 14.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் கட்டணமில்லாத கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும். · Free cervical cancer screening will be carried out for all women above 30 years of age at primary health centres across Tamil Nadu.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் மனநலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 5,000 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உளவியல் முதலுதவிப் பயிற்சிகள் வழங்கப்படும். · To ensure the mental health and safety of government school students and teachers, 5,000 mental health counsellors will be appointed and psychological first-aid training will be given to students and teachers.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
த.வெ.க. அரசு அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ‘மக்கள் நலன் காப்பீடு’ அட்டை வழங்கப்படும். · As soon as the TVK government is formed, every family will be given a 'Makkal Nalan Kaappeedu' (People's Welfare Insurance) card worth Rs. 25 lakh.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை செய்யப்படும். · Every person in Tamil Nadu will be given a free full body check-up once a year.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
தமிழ்நாட்டின் தென்பகுதி தொடங்கி பின்தங்கிய ஐந்து பகுதிகளைத் தேர்ந்தெடுத்து 500 படுக்கைகள், டிஜிட்டல் ஐசியு, நவீன நோய் கண்டறியும் வசதிகள் ஆகியவை கொண்ட ஐந்து பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்படும். · Selecting five backward areas, starting from the southern part of Tamil Nadu, five multi-speciality hospitals with 500 beds, digital ICUs and modern diagnostic facilities will be opened.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் ‘IPHS - 2025’ என்ற நிலைக்குத் தரம் உயர்த்தப்படும். மூன்று மருத்துவர்கள், ஒரு லேப் டெக்னீஷியன், ஒரு மனநல ஆலோசகர் என மருத்துவ ஊழியர்கள் 24*7 நேரமும் தயாராக இருப்பார்கள். · All primary health centres will be upgraded to the 'IPHS - 2025' standard. Medical staff of three doctors, one lab technician and one mental health counsellor will be available 24*7.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
ஒரு செவிலியர், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தோடு கலந்தாலோசிக்க டெலி மெடிசின் வசதிகள், நோய் கண்டறியும் கருவிகள் ஆகியவற்றோடு 3,000 மக்கள் நல நிலையங்கள் அமைக்கப்படும். இந்த மக்கள் நல நிலையங்கள் வாரம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படும். · 3,000 people's welfare centres will be set up with a nurse, telemedicine facilities to consult the nearby primary health centre, and diagnostic equipment. These people's welfare centres will function all week from 7 am to 9 pm.
TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto
27 promises in all.