வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

குறிப்பாக தகுதி பெற்ற ஆப்பரேட்டர்கள், கடலோர உயிர் காப்பாளர்கள், டூரிஸ்ட் போலீஸ் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். · In particular, facilities including qualified operators, coastal lifeguards, tourist police and help centres functioning 24 hours a day will be provided.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இதற்கென தனி காவல் பிரிவு அமைக்கப்படும். · Atrocities against Adi Dravidar and Tribal people will be completely prevented. A separate police wing for this will be set up under each District Superintendent of Police.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மூத்த குடிமக்கள் பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும். அதில் தனியாக ஒருங்கிணைப்பு அலுவலர்(Nodal Officer) நியமிக்கப்பட்டு, முதியோர்களுக்கு எதிரான சொத்துப் பிரச்சினைகள், துன்புறுத்தல்கள், கைவிடப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும். · A senior citizens protection wing will be set up in every District Superintendent of Police office. A separate coordinating officer (Nodal Officer) will be appointed in it, and problems against the elderly such as property disputes, harassment and abandonment will be resolved.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

காவலர் நலம் மற்றும் வேலை சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்கப்படும். · A Police Welfare and Work Reform Act will be brought in and a weekly day off will be given on a rotation basis.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

காவலர் சலவைப்படி 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். · The police washing allowance will be raised from 500 rupees to 1000 rupees.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவலர் நல மருத்துவமனை அமைக்கப்படும். · Police welfare hospitals will be set up in districts including Madurai, Kovai, Trichy, Tirunelveli, Salem and Vellore.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

சட்டம் - ஒழுங்கைக் காக்கும் பணியில் துணிச்சலாகச் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களை கௌரவப்படுத்தும் வகையில், அவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் கௌரவ ஊதியமாக வழங்கப்படும். · To honour police personnel who act bravely and lose their lives in maintaining law and order, 1 crore rupees will be given to their families as an honorarium.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் தற்போதுள்ள ரூ.18,200-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்படும். · The basic monthly salary of police personnel will be raised from the current Rs.18,200 to Rs.25,000.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

அதிக பணிச்சுமை உள்ள பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களுக்கு மாதந்தோறும் கூடுதல் ஊக்கத்தொகையாக (Duty Allowance) ₹1,000 வழங்கப்படும். · Police personnel working in divisions with heavy workloads will be given ₹1,000 every month as an additional incentive (Duty Allowance).

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

காவலர் இடமாற்றங்கள் மற்றும் பணி நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இல்லாத, வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க காவல் நிர்வாகம் உறுதி செய்யப்படும். · A transparent and accountable police administration, free of political interference in police transfers and postings, will be ensured.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தமிழகத்தில் வி.ஐ.பி-க்களின் வீடுகளில் விதிமுறைகளுக்கு மாறாக ஆர்டலிகளாக காவலர்களை பணியமர்த்தும் முறை நிறுத்தப்படும். · The practice in Tamil Nadu of deploying police personnel as orderlies in the homes of VIPs, contrary to the rules, will be stopped.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

அனைத்து மாவட்டங்களிலும் போதுமான காவலர் குடியிருப்புகள் இருப்பது உறுதி செய்யப்படும். · It will be ensured that there is adequate police housing in all districts.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

25 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.