வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

2018 - ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை த.வெ.க பெற்றுத்தரும். · TVK will secure Tamil Nadu's rightful share of Cauvery water as per the 2018 Supreme Court verdict.

TVK · 2026 · நடைபெறுவதாக 2 செய்திகள் · Reported in progress by 2 reports · Manifesto

தமிழகத்திற்குரிய நீரைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு உடனடியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். · Immediate legal action will be taken against obstacles created in obtaining the water due to Tamil Nadu.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தொடர்ச்சியான - முறையான கண்காணிப்புகளின் மூலம் காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கில் ஒரு சொட்டு நீரைக்கூட விட்டுத்தரமாட்டோம்! · Through continuous and proper monitoring, we will not give up even a single drop of water from Tamil Nadu's rightful share of the Cauvery!

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவிகிதம் சுத்தமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். · 100 percent clean drinking water supply will be ensured to all households in Tamil Nadu.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

காவிரி-வைகை-குண்டாறு, தென்பெண்ணையாறு-பாலாறு, பென்னையாறு-செய்யாறு, தாமிரபரணி-வைப்பாறு இந்த நதிநீர் இணைப்புத்திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில், 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தமிழகம் முழுவதும் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்பாசனத் தொட்டிகள் முறையான பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருக்கின்றன. இவை அனைத்தும் நீராட்சித் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும்.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

இதன்மூலம், 5 லட்சம் புதிய விவசாயக் குளங்கள் அமைக்கப்படும். · Through this, 5 lakh new farm ponds will be created.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

மண்டல வாரியான நீர் உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக வெற்றிக் கழகம் ஒரு சிறப்புத் திட்டத்தை (Mission-mode programme) அமல்படுத்தும். · Tamilaga Vettri Kazhagam will implement a special programme (Mission-mode programme) to speedily carry out zone-wise water infrastructure projects.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, காவிரி டெல்டாப் படுகையின் நிலத்தடி நீர் உப்பாகி உள்ள நிலை சிறப்புக் கவனம் எடுத்து சீர் செய்யப்படும். · With a fund of 5000 crore rupees allocated, the salinisation of groundwater in the Cauvery delta basin will be set right with special attention.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

வற்றிப்போன நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், மண் வளம் மீட்பு போன்ற நடவடிக்கைகள் தனிக் கவனம் எடுத்து சரி செய்யப்படும். · Measures to raise the depleted groundwater level and measures such as restoring soil fertility will be carried out with special attention.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

எஞ்சியுள்ள நீர்நிலைகள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கண்டறிந்து மீட்டு சீரமைப்பதோடு, நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். · The remaining water bodies and natural ecosystems will be identified, recovered and restored, and strict action will be taken against encroachments on water bodies.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் · 100 per cent piped drinking water supply for all households

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

13 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.