வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

புதிதாக வாங்கப்படும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு 50 சதவிகித மானியம் (ரூபாய் 75000 வரையில்) வழங்கப்படும். · A 50 percent subsidy (up to Rs 75000) will be given for newly purchased electric autos.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோக்களை சி.என்.ஜி (கேஸ்) முறைக்கு மாற்றுவதற்கு 50 சதவிகிதம் (30000 ரூபாய் வரையில்) மானியம் வழங்கப்படும். · A 50 percent (up to Rs 30000) subsidy will be given for converting autos currently in use to CNG (gas).

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

பனைமரம் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கப்படும். · The palmyra tree will be declared a protected tree.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், கன்னியாகுமரி என கடல் அரிப்பால் அதிகம் பாதிப்படும் கடலோர மாவட்டங்களில் 200 கி.மீ நீளத்திற்கு தடுப்பரண்கள் அமைக்கப்படும். · Barriers 200 km in length will be built in the coastal districts most affected by sea erosion, such as Nagapattinam, Cuddalore, Viluppuram, Ramanathapuram and Kanniyakumari.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

காவிரி டெல்டா படுகையை சீரமைக்கும் விதமாக வேளாண் நச்சுயியல் மையம் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் ஏற்பட்ட பாதிப்பு, ரசாயனங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆராயப்பட்டு, அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். · To restore the Cauvery delta basin, an agricultural toxicology centre will be set up; the damage caused in those areas by environmental degradation and by chemicals will be studied, and measures to set it right will be taken.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

கடலூர் சிப்காட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பிற்கும், மாசு கட்டுப்பாட்டிற்காகவும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். · 500 crore rupees will be allocated for wastewater treatment and pollution control at Cuddalore SIPCOT.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

திருவள்ளூரில் உள்ள 'ஸ்டீல் ரோலிங் மில்' காரணமாக உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், பசுமை வழி உற்பத்தியை உறுதி செய்ய 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். · To control the environmental damage caused by the 'steel rolling mill' in Tiruvallur, 300 crore rupees will be allocated to ensure green production.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

தூத்துக்குடி துறைமுகத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த முதலீடுகள் செய்யப்படும். · Investments will be made at Thoothukudi port to implement renewable energy projects.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ஐ.நா. குறிப்பிடும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்கக் காலநிலை பட்ஜெட்டாக ரூ.3000 கோடி ஒதுக்கப்படும். · So that Tamil Nadu excels in the actions against climate change specified by the U.N., Rs.3000 crore will be allocated as a climate budget.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

வேறு எதற்கும் பயன்படுத்த முடியாத இந்த நிதி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்லவும், பசுமை முதலீட்டை ஈர்க்கவும் மட்டும் செலவிடப்படும். · This fund, which cannot be used for anything else, will be spent only on taking the state towards renewable energy resources and on attracting green investment.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை அலுவலகம், சென்னை உள்ளிட்ட 5 கடலோர நகரங்களில் வெள்ள தடுப்பு கட்டமைப்பு, உள்ளூர் வெப்ப அலையைக் கணிப்பது தொடங்கி உடனடி மருத்துவ பரிசோதனை வரை மேற்கொள்ள 38 மாவட்டங்களிலும் வெப்ப அலைக்கு பிரத்தியேக பேரிடர் மேலாண்மை அலுவலகம் போன்றவை உருவாக்கப்படும். · An integrated disaster management office in all 38 districts, flood prevention infrastructure in 5 coastal cities including Chennai, and a dedicated heat-wave disaster management office in all 38 districts to carry out everything from forecasting local heat waves to immediate medical check-ups, and the like, will be created.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

முதலமைச்சரின் அலுவலகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் நீடித்த ஆற்றல் பொருளாதாரப் பிரிவு உருவாக்கப்படும். · A sustainable energy economy division functioning directly under the Chief Minister's office will be created.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

30 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.