வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்து, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க த.வெ.க சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். · On behalf of TVK, the Union Government will be urged to grant Indian citizenship to Sri Lankan Tamils who migrated from Sri Lanka and live in Tamil Nadu.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை, பண்பாட்டு அடையாளங்களை, உடமைகளைக் காக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள த.வெ.க சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும். · On behalf of TVK, pressure will be put on the Union Government to take appropriate steps to protect the rights, cultural identities and properties of Tamils living in Sri Lanka.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

இலங்கையில் இன ரீதியாக நிலவும் பாகுபாடுகளைக் களைய ஒன்றிய அரசு மூலம் த.வெ.க உரிய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். · TVK will continuously make appropriate efforts through the Union Government to remove the ethnic discrimination prevailing in Sri Lanka.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

சுற்றுலாவை வெறும் பொழுதுபோக்கும் அம்சமாக மட்டுமே கருதாமல் சூழல் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கடலோரச் சுற்றுலா, கலாசார சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய மகிழ்ச்சிகரமான, ஆக்கப்பூர்வமான சுற்றுலாத் திட்டமாக முன்வைக்கிறது, த.வெ.க-வின் 'தமிழ்நாடு பொறுப்பு சுற்றுலா'. · TVK's 'Tamil Nadu Responsible Tourism' presents tourism not merely as entertainment but as an enjoyable, constructive tourism scheme covering eco-tourism, heritage tourism, coastal tourism and cultural tourism.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

இதன் மூலம் வரும் வருவாயில் 25 விழுக்காடு அந்தந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக செலவிடப்படும். · 25 percent of the revenue from this will be spent on improving the livelihoods of the local people of each place.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

கிராமப்புற வாழ்வனுபவத்தை வழங்கும் கிராமப்புறச் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். · Rural tourism centres offering an experience of rural life will be created.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆன்மீகத் தலங்களை உள்ளடக்கிய அறுபடைவீடு சுற்றுலாத் திட்டம். · An Arupadaiveedu tourism scheme covering the spiritual sites of Palani, Thiruparankundram, Tiruchendur, Swamimalai, Tiruttani and Pazhamudircholai.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

சிதம்பரம், திருவண்ணாமலை, கும்பகோணம், திருவையாறு ஆகிய தலங்களை உள்ளடக்கிய சிவத்திருத்தலச் சுற்றுலாத் திட்டம். · A Shiva shrines tourism scheme covering the sites of Chidambaram, Tiruvannamalai, Kumbakonam and Thiruvaiyaru.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ஸ்ரீரங்கம், திருக்கோஷ்டியூர், ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்களை உள்ளடக்கிய வைணவ புனிதத்தல சுற்றுலாத் திட்டம் · A Vaishnava holy sites tourism scheme covering the sites of Srirangam, Thirukoshtiyur and Alwarthirunagari.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

நாகூர் தர்கா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய நமது அனைத்து சமயங்களைச் சேர்ந்த புனிதத்தலங்களை உள்ளடக்கிய சமய நல்லிணக்கச் சுற்றுலாத் திட்டம் · A religious harmony tourism scheme covering holy sites of all our religions, such as Nagore Dargah, Velankanni and Kanniyakumari.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

வேதாரண்யம் தொடங்கி ராமேஸ்வரம் மண்டபம் வரை கடல்சார் சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும். · A maritime tourism corridor will be created from Vedaranyam to Rameswaram Mandapam.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி தமிழகத்தின் முதல் கடல்சார் சுற்றுலா மாவட்டமாக அறிவிக்கப்படும். · Rameswaram – Dhanushkodi will be declared Tamil Nadu's first maritime tourism district.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, முதுமலை ஆகிய இடங்களில் 15 மலையேற்ற பாதைகள் கண்டறியப்பட்டு நீலகிரி மலை சாகச சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும். · 15 trekking routes will be identified at Ooty, Coonoor, Gudalur, Kotagiri and Mudumalai, and a Nilgiris mountain adventure tourism scheme will be implemented.

TVK · 2026 · செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · Manifesto

30 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.